சென்னை: இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துக் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான திரைப்படம் 'லால் சலாம்'. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ், சுபாஸ்கரன் தயாரித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ரஜினிகாந்த், பெரும்பாலான காட்சிகளில் தோன்றினாலும், லால் சலாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தின் நிறையக் காட்சிகள் காணாமல் போனதால் இருப்பதை வைத்துப் படத்தை முடித்தாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "லால் சலாம் படத்தின் 21 நாட்கள் எடுத்த காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் (hard disk) தொலைந்துவிட்டது. ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி காட்சிகள் எடுத்திருந்தோம். அந்த காட்சிகள் உண்மையான கிரிக்கெட் போட்டி போல 10 கேமராக்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்டது.