ETV Bharat / entertainment

"நீங்க இல்லாம நான் இல்ல" ... சிலம்பரசன் 50வது படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு! - STR50 SILAMBARASAN BIRTHDAY

STR50 Birthday Poster: அட்மன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 50வது படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

STR50 போஸ்டர் வெளியீடு
STR50 போஸ்டர் வெளியீடு (Credits: Silambarasan TR X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 3, 2025, 1:14 PM IST

சென்னை: நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 50வது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிரபல நடிகரும், டி.ராஜேந்தர் மகனுமாகிய சிலம்பரசன் ‘உறவை காத்த கிளி’ திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் கதாநாயகனாக நடித்தார். சினிமாத்துறையில் தனது ஆரம்பக் கட்டத்தில் நடித்த படங்களில் தன்னை ஆக்‌ஷன் ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார்.

அது மட்டுமின்றி சிலம்பரசன், பெண்கள் மனம் கவர்ந்த ரொமான்டிக் ஹீரோவாகவும் வலம் வந்தார். 'மன்மதன்' திரைப்படம் மூலம் இளைஞர்களை கவர்ந்தார். தனது தந்தை போல் சினிமாவில் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கிய சிலம்பரசன், 'வல்லவன்' படத்தை தானே இயக்கி நடித்தார். இப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் அவரது திரைவாழ்வில் முக்கிய படமாக அமைந்தது.

அதுவரை சிம்புவை வெறும் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு, கார்த்திக் என்ற கதாபாத்திரம் வேறு பரிணாமத்தை காட்டியது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் சிம்பு, த்ரிஷா கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. இதனையடுத்து திரைத்துறையில் வெற்றிகரமாக வலம் வந்த சிலம்பரசன் மீது சரியாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

நடிகர் சிலம்பரசன் திரை வாழ்வில் சில காலம் தொய்வு ஏற்பட்ட நிலையில், 'மாநாடு' திரைப்படம் அவருக்கு கம்பேக் படமாக அமைந்தது. இன்று நடிகர் சிலம்பரசன் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது பட அப்டேட்டுகள் வரிசையாக வெளியாகி வருகிறது. ஏற்கனவே 'STR48' படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குவதாக அறிவிப்பு வெளியான நிலையில், இன்று STR49 படத்தின் அப்டேட் வெளியானது.

இதையும் படிங்க: சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல்: பார்க்கிங் இயக்குநர் பட அறிவிப்பு, தக் லைஃப் படக்குழுவினர் வெளியிட்ட மாஸ் அப்டேட்! - SILAMBARASAN BIRTHDAY

இந்த படத்தை பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்குகிறார். தற்போது சிலம்பரசனின் 50வது பட அப்டேட் வெளியாகியுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படத்தை இந்த படத்தை அட்மன் சினி ஆர்ட்ஸ் (ATMAN Cine Arts) என்ற நிறுவனம் தயாரிக்கிறது. STR50 மூலம் சிலம்பரசன் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். முன்னதாக இப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் STR50 மூலம் சிம்பு, யுவன் கிளாசிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.