சென்னை: அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்து வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜூன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அசர்பைஜான் நாட்டில் அஜித் பயணம் செல்லும் போது அவரது மனைவி த்ரிஷாவை கேங்ஸ்டர் கூட்டம் கடத்துகின்றனர். இதனைத்தொடர்ந்து அஜித் அவர்களிடமிருந்து த்ரிஷாவை எப்படி மீட்கிறார் என்பதை மையக்கதையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்றும், அந்த படக்குழுவினரிடம் காப்புரிமை வாங்காததால் விடாமுயற்சி பட ரிலீசில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு நிலவியது. வரும் 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் நிலையில், படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, நடிகர் ஆரவ் ஆகியோர் தீவிர புரமோஷனில் இறங்கியுள்ளனர்.
இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி கண்டிப்பாக ஹிட்டாகும் எனவும், இந்த படத்தில் அஜித்திற்கு அறிமுக காட்சி, பாடல் ஆகியவை கிடையாது. ஆனால் அஜித்தின் வித்தியாசமான நடிப்பை காணலாம் எனவும் கூறியுள்ளார். துணிவு திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் முன்பு அஜித் படத்திற்கு இல்லாத அளவிற்கு சாதனை படைத்து வருகிறது.
#VidaaMuyarchi - 123K Tickets Sold in Last 24 Hours..🤩🔥 Many Screens and First shows are not Opened Yet..⭐ 2025's First Biggest Box Office Sambavam on Cards..💥 #Ajithkumar is Back with a Bang after Two Years..🎉 pic.twitter.com/bWinluKWZU
— Laxmi Kanth (@iammoviebuff007) February 3, 2025
இதையும் படிங்க: சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல்: பார்க்கிங் இயக்குநர் பட அறிவிப்பு, தக் லைஃப் படக்குழுவினர் வெளியிட்ட மாஸ் அப்டேட்! - SILAMBARASAN BIRTHDAY
அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் கடந்த வாரம் விடாமுயற்சி திரைப்பட டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் விடாமுயற்சி திரைப்படத்தின் டிக்கெட் அதிக அளவில் விற்றுத் தீர்ந்துள்ளது. Bookmyshow இணையதளத்தில் கடைசி 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் விடாமுயற்சி திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் தமிழ்நாட்டில் மட்டும் 2.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.