ETV Bharat / health

கருப்பு திராட்சையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? - BLACK GRAPE BENEFITS

கருப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் பண்பு அல்சைமர் நோய் ஏற்படுவதை தடுப்பதாக அய்வுகள் கூறுகின்றனர். கருப்பு திராட்சையில் உள்ள நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Feb 3, 2025, 12:53 PM IST

இருதய பிரச்சனை: திராட்சையில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, கருப்பு மற்றும் சிவப்பு திராட்சையின் தோலில் உள்ள ரெஸ்வெராட்ரோல் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியல் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அல்சைமர் தடுப்பு: அல்சைமர் நோயின் முன்னேற்றத்தை குறைக்க ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

தோல் பராமரிப்பு: இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.

புற்றுநோயைக் குறைக்கும் வாய்ப்புகள்: திராட்சையில் அதிகம் உள்ள ரெஸ்வெராட்ரோல், புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் திராட்சைப்பழத்தை இரண்டு வாரங்களுக்கு சாப்பிட்டு வர, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

மலச்சிக்கல் மற்றும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுகிறது: ரெஸ்வெராட்ரோல் மற்றும் ஸ்டெரோஸ்டில்பீன் ஆகியவை உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். திராட்சையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கும் என்று கூறப்படுகிறது.

எலும்பு வலிமை: திராட்சையில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுவாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது. இது செல் வளர்ச்சிக்கும் கண் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது என்று விளக்கப்பட்டுள்ளது. நோய்களில் இருந்து விரைவில் குணமடைய இது பயனுள்ளதாக இருக்கும்.

திராட்சையில் உள்ள ஊட்டச்சத்துகள்:

  • தண்ணீர் - 82 %
  • கலோரி - 31%
  • கார்போஹைட்ரேட் - 8%
  • சர்க்கரை - 7 கிராம்

மேலும், இதில் பொட்டாசியம், வைட்டமின் சி, கே, மெக்னீசியம், தாமிரம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது என்றும் விளக்கப்பட்டுள்ளது. திராட்சையில் பல நன்மைகள் இருந்தாலும், ளவோடு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக இரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருபவர்கள் மிதமாக உட்கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க:

சொறி சிரங்கு முதல் சிறுநீரக கல் பிரச்சனை வரை..தினமும் 1 செவ்வாழை சாப்பிடுங்கள் போதும்!

உடலில் நீர்ச்சத்து குறைபாடு? வாரத்திற்கு 2 முறை இந்த காய்கறி சாப்பிடுங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.