சென்னை: இந்தோனேஷியாவின் தலைநகரமான ஜகார்தாவில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஶ்ரீ சனாதன தர்ம கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலமாக கலந்து கொண்டார். இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தோனேஷியா நாட்டின் தலைநகரமான ஜகார்தா நகரத்தில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள, முருகப் பெருமானின் ஶ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழாவுக்கு, காணொளி வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கும் போது, “முருகனுக்கு அரோகரா” என்று தமிழில் தொடங்கியது, பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்தோனேஷிய அதிபர் உள்ளிட்ட அந்த நாட்டின் தலைவர்களுக்கு அனுப்பிய காணொளியில்,
இந்தோனேஷியா நாட்டின் தலைநகரமான ஜகார்தா நகரத்தில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள, முருகப் பெருமானின் ஶ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழாவுக்கு, காணொளி வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், தனது உரையைத்… pic.twitter.com/CaRvdUG5Ac
— K.Annamalai (@annamalai_k) February 2, 2025
இந்தியாவிற்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையிலான உறவு, ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான கலாச்சாரம், பாரம்பரியம், நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை எடுத்துக் கூறிய நமது பிரதமர் முருகப்பெருமானைப் போற்றிப் பாட, திருப்புகழ் பாடல்களையும், அனைத்து மக்களும் பாதுகாப்புடன் இருக்க, கந்த சஷ்டி கவசத்தையும் தொடர்ந்து பாராயணம் செய்ய வேண்டும் என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழக மக்களின் ஆன்மீக நம்பிக்கையை, உலக அரங்கில் எதிரொலித்த பாரதப் பிரதமருக்கு அனைத்து முருக பக்தர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார்.