Hyderabad: இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 1951ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் கிராமி விருதுகள் இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. கிராமி விருதுகள் பாப், ராக், நாட்டுப்புறம், ஜாஸ் உள்ளிட்ட பல்வேறு ஜானர் இசைப்பிரிவில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 67வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்தியா வம்சாவளியை சேர்ந்த பாடகி சந்திரிகா டாண்டன், ’த்ருவேனி’ என்ற பாடலுக்காக சிறந்த தற்கால இசை ஆல்பத்திற்கான பிரிவில் கிராமி விருது வென்றுள்ளார். ’த்ருவேனி’ என்ற இசை ஆல்பத்தை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞர் வௌட்டர் கெலர்மேன் மற்றும் ஜப்பானிய இசைக்கலைஞர் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து பாடி, கிராமி விருதை வென்றுள்ளார். த்ருவேனி ஆல்பம் இந்திய கிளாசிக் இசை, வேத மந்திரங்கள் ஆகியவை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. கிராமி விருது வென்றதற்கு சந்திரிகா டாண்டனுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
![கிராமி விருது வென்ற சந்திரிகா டாண்டன் குழு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-02-2025/gettyimages-2197328270_0302newsroom_1738556749_737.jpg)
யார் இந்த சந்திரிகா டாண்டன்?
சென்னையில் பிறந்த சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். இவர் பெப்சிகோ (PepsiCo) நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் மூத்த சகோதரி ஆவார். பட்டப் படிப்பிற்கு பின் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்த டாண்டன் தொழில்துறையில் சிறந்து விளங்கினார். இதனிடையே கடந்த 2005ஆம் ஆண்டில் Soul chants music என்ற இசை லேபிள் நிறுவனத்தை தொடங்கினார்.
Congratulations to Ms. Chandrika Tandon @chandrikatandon on winning Grammy Award @RecordingAcad in Best New Age, Ambient, or Chant Album category for Triveni!
— India in New York (@IndiainNewYork) February 3, 2025
A mesmerizing fusion of ancient mantras, flute, and cello, Triveni bridges cultures and traditions through the… pic.twitter.com/H5WC0CnltD
இதன் மூலம் அமெரிக்காவின் kennedy center, lincoln center, times square ஆகிய இடங்களில் பாடல்கள் பாடி வரவேற்பைப் பெற்றுள்ளார். நியூயார்க், ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள சந்திரிகா டாண்டன் அமெரிக்கா கலை மற்றும் அறிவியல் அகாடமியில் உறுப்பினராக உள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி த்ருவேனி ஆல்பத்தை சந்திரிகா வெளியிட்ட நிலையில், தற்போது கிராமி விருது வென்று சாதித்துள்ளார்.
இந்த வருடம் சிறந்த நாட்டுப்புற ஆல்பத்திற்கான விருதினை cowboy carter என்ற ஆல்பம் வென்றுள்ளது.
67வது கிராமி விருது வென்றவர்கள் பட்டியல்:
- சிறந்த ஆல்பம்: cowboy carter(beyonce)
- சிறந்த ரிக்கார்டிங்: Not like Us (kendrick lamar)
- சிறந்த பாடல்: Not like Us (kendrick lamar)
- சிறந்த பாப் பாடல் குழு: Die with a smile (lady gaga and bruno mars)
- சிறந்த நாட்டுப்புற இசை ஆல்பம்: II most wanted (beyonce ft.miley cyrus)
- சிறந்த தற்கால இசைகலைஞர்: cheppell roan
- சிறந்த பாப் இசை ஆல்பம்: short and sweet (sabrina carpenter)
- சிறந்த லத்தீன் இசை ஆல்பம்: Las mujeres ya No Lioran(shakira)
- சிறந்த நடனம்/ எலக்ட்ரானிக் ஆல்பம்: BRAT (charli XCX)
- சிறந்த ராக் இசை ஆல்பம்: hackney diamonds (the rolling stones)
- சிறந்த ராப் இசை ஆல்பம்: alligator bites never heal (doechii)