தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரஜினி பட நடிகை கர்ப்பம்... திரைப்பட விழாவிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகை! - RADHIKA APTE

Radhika apte: லண்டன் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை ராதிகா ஆப்தே, கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பம்
நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பம் (Credits - Getty Images)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 17, 2024, 12:57 PM IST

சென்னை: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பமாக உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்த ராதிகே ஆப்தே பெங்காலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டில் பத்லாபூர் (Badlapur), ஹண்டர் (hunter), நவாசுதீன் சித்திக்குடன் மன்ஜி(manji) ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றார். பின்னர் 2016ஆம் ஆண்டு ராதிகா ஆப்தே நடித்த phobia மற்றும் parched ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் ’கபாலி’ படத்தில் நடித்தார். அதனைத்தொடர்ந்து தோனி, ராம் கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்தரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நாடக கலைஞரான ராதிகா ஆப்தே திரைப்படங்களில் மிகவும் தேர்ந்த நடிப்பை வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தே இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வயலின் இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தனது தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் வெளிப்படுத்த விரும்பாத ராதிகா ஆப்தே, திருமணத்திற்கு பிறகு படப்பிடிப்பின் காரணமாக இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் சென்று வந்தார்

இதையும் படிங்க: மிஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்ற நிகிதா போர்வால்; உலக அழகி போட்டியில் பங்கேற்க வாய்ப்பு!

இந்நிலையில் நேற்று நடைபெற்ற லண்டன் திரைப்பட விழாவில் ராதிகா ஆப்தே பங்கேற்றார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவருக்கு பிரபல நடிகர்கள் சோயா அக்தர், விஜய் வர்மா, மிருணால் தாகூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். ராதிகே ஆப்தே கடைசியாக விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் ஆகியோருடன் மேரி கிறிஸ்துமஸ் (Merry christmas) படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details