தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜியோ 8வது ஆண்டு விழா; வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் என்ன தெரியுமா? - Jio 8th Anniversary Offers - JIO 8TH ANNIVERSARY OFFERS

Jio Anniversary Offers: ஜியோ நிறுவனம் தனது 8வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.

ஜியோ தொடர்பான சித்தரிப்பு படம்
ஜியோ தொடர்பான சித்தரிப்பு படம் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tech Team

Published : Sep 5, 2024, 9:10 PM IST

ஹைதராபாத்: 490 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்தியாவின் மாபெரும் நிறுவனமான ரிலையன்ஸின் ஜியோ, தற்போது தனது 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்தவகையில், ஜியோ தனது பயனர்களுக்கு சில சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களின் மூலமாக இந்த சலுகைகளை அறிவித்துள்ளது.

சலுகை கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள்: ரூ.899, ரூ.999 மற்றும் ரூ.3,599 ஆகிய மூன்று ரீசார்ஜ் திட்டங்களில் இந்த ஜியோ 8ஆம் ஆண்டுவிழா சலுகைகள் கிடைக்கிறது. அதன்படி செப்டம்பர் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை மேற்கூறிய மூன்று திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால், ஜியோவின் சிறப்பு சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.899 ரீசார்ஜ் திட்டம்: ஜியோவின் 899 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியாகும். இதில் நாளொன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் காரணமாக, கூடுதலாக 20GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது.

ரூ.999 ரீசார்ஜ் திட்டம்: ஜியோவின் 999 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 98 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டதாகும். 899 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை போலவே இதிலும் நாளொன்றுக்கு 2GB டேட்டா மற்றும் 1அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 இலவச எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது கூடுதலாக 20GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது.

ரூ.3,599 ரீசார்ஜ் திட்டம்: இது ஜியோவின் ஒரு ஆண்டிற்கான ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் எல்லாம் போக மேற்கூறிய ஆண்டு விழா சலுகைகளும் தற்போது கொடுக்கப்படுகிறது.

8ஆம் ஆண்டு விழா சலுகைகள்: ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ள மூன்று ரீசார்ஜ் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.175 மதிப்புள்ள 10 OTT செயலிகளின் சந்தா (OTT Apps Subscription), 10GB டேட்டா, மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையிலான சொமேட்டோ கோல்டு மெம்பர்ஷிப் (Zomato Gold Membership), அஜியோவில் (AJIO) ரூ.2,999க்கு மேல் பொருட்கள் வாங்கும்போது பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான 500 ரூபாய் மதிப்பிலான அஜியோ வவுச்சர் ஆகியவை கிடைக்கிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:Flipkart Big Billion Days விற்பனை தேதி அறிவிப்பு... 80% வரை ஆஃபர்.. எந்தெந்த பொருட்களுக்கு கிடைக்கும்?

ABOUT THE AUTHOR

...view details