தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"Pure Veg Mode": சோமேட்டோவுக்கு எதிராக திரும்பிய நெட்டிசன்கள் - அந்தர் பல்டி அடித்த சோமேட்டோ சிஇஓ! - Zomato Pure Veg Mode - ZOMATO PURE VEG MODE

Zomato: சைவ பிரியர்களுக்கு பிரத்யேக "Pure Veg Mode", பச்சை நிற உடை அணிந்த டெலிவிரி ஊழியர்கள் என்ற சோமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்பு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்குள்ளான நிலையில் சோமோட்டோ நிறுவனம் தனது முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 12:57 PM IST

Updated : Apr 3, 2024, 3:23 PM IST

டெல்லி:பிரபல உணவு விநியோக சங்கிலியான சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீப்பிந்தர் கோயல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் சுத்த சைவ பிரியர்களுக்கு என சோமேட்டோவில் "Pure Veg Mode" சேவை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

நீண்ட நாட்களாக சைவ உணவுகள் எவ்வாறு உணவகங்களில் தயாரிக்கப்படுகிறது, உணவு டெலிவிரி நபர்கள் மூலம் தங்களது உணவு எப்படி கையாளப்படுகிறது என தொடர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், சைவ பிரியர்களுக்கு என "Pure Veg Mode" சோமேட்டோவில் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், "Pure Veg Mode" பிரிவில் சுத்த சைவ உணவுகளை தயாரிக்கும் உணவகங்கள் மட்டும் பட்டியலிடப்படும் என்றும், அதை பெற்று டெலிவிரி செய்யும் நபர்களும் பச்சை நிறத்தை உடை அணிந்து கொள்வார்கள் என்றும் தீப்பிந்தர் கோயல் அறிவித்தார். மேலும், இந்த அறிவிப்பு மக்களை மத ரீதியாகவோ, சமுதாய ரீதியாகவோ பிளவுபடுத்தும் நோக்கமல்ல என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சோமேட்டோ தலைமை செயல் அதிகாரியின் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் தொடர் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், சோமேட்டோ நிறுவனம் அதன் முடிவில் இருந்து பின் வாங்கி உள்ளது.

அதன்படி சோமேட்டோ தலைமை செயல் அதிகாரி தீப்பிந்தர் கோயல் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், சைவ உணவு பிரியர்களுக்காக தொடங்கப்பட்ட pure veg fleet முறை தொடர்ப் போவதாகவும் அதேநேரம் ஊழியர்கள் தங்களது பழைய சிவப்பு நிற உடையிலேயே தொடர்ந்து டெலிவிரி செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சைவ உணவு பிரியர்களுக்கு என அறிமுகப்படுத்தப்பட்ட "Pure Veg" முறை தொடர்ந்து சேவையில் இருக்கும் என்றும் அதற்கென உள்ள pure veg fleetல் அவர்களுக்கான உணவகங்கள் பரிந்துரைக்கப்பட்டும் டெலிவிரி செய்யப்படும் என்றும் தீப்பிந்தர் கோயல் விளக்கம் அளித்து உள்ளார்.

சிவப்பு நிறை சீருடை என்பது அசைவ உணவுப் பிரியர்களுக்கு என ஒதுக்கப்பட்ட உடை இல்லை என்பதையும் விஷேச மற்றும் முக்கியமான நேரங்கள் மற்றும் நாட்களில் உணவு டெலிவிரி செய்யும் எங்களது ஊழியர்களை வேறு யாரும் தடுத்த நிறுத்தக் கூடாது மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதியும் அந்த சீருடை வழங்கப்பட்டு உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :ஏப்.19ல் நாடு முழுவதும் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல்! வேட்புமனுத் தாக்கல் முதல் வாபஸ் வரை முழுத் தகவல்!

Last Updated : Apr 3, 2024, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details