ETV Bharat / opinion

டெல்லி தேர்தல்: பாஜக, காங்கிரஸைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவாகலாம்! - DELHI ELECTIONS

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜக, காங்கிரஸைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவாகலாம்.

அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (credit - ANI)
author img

By Sanjay Kapoor

Published : Feb 3, 2025, 3:40 PM IST

Updated : Feb 3, 2025, 3:53 PM IST

புதுடெல்லி: டெல்லியை போல, நாட்டின் வேறு எந்த நகரமும் பொதுமக்களின் கற்பனையில் ஆதிக்கம் செலுத்தவில்லை. டெல்லியின் சட்டமன்றத் தேர்தல் மிகுந்த போட்டியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதற்கு இதுவே காரணம். பிப்ரவரி 5ம் தேதி டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் டெல்லி அரசியலில் பல அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களும் சிறைக்கு சென்ற வினோதமான விஷயங்களும் நடந்தேறியுள்ளன.

மாநிலத்தின் அதிகாரத்தை தக்க வைக்க ஆளும் மாநில அரசும், கைப்பற்ற மத்திய அரசும் போட்டி போடுகின்றன. இதனால் ஏற்பட்ட அரசியல் அதிர்வுகளை அடுத்து பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் வெற்றியை நோக்கி தீவிரமாக களமிறங்கியுள்ளன.

முக்கிய தேர்தல்

நீண்ட ஆண்டுகள் கழித்தது முதன்முறையாக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற நினைக்கும் தேர்தலாக இது இருக்கும். அந்த வகையில், மற்ற கட்சிகளை விட ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லியை கைப்பற்றலாம்.

தலைநகர் டெல்லியில் இருந்து வரும் செய்திகள் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை கவனிக்கும் போது இங்கு நடக்கும் தேர்தல்கள் மற்ற மாநிலங்களை விட எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்துகிறது. 33 மில்லியன் மக்கள்தொகை கொண்ட டெல்லியில்15.6 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். இது மிகப் பெரியதாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்கின்றனர். உதாரணமாக, கரோல் பாக்கில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

சித்தரஞ்சன் பூங்காவில் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து அதிக மக்கள் உள்ளனர். அதேசமயம் கிழக்கு டெல்லியில் பெரும்பாலும் உத்தரகாண்ட் மக்கள் உள்ளனர். டெல்லி மக்கள்தொகையில் இங்கு வசிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. ஆனால், பெரும்பாலும் அவர்கள் அவரவர் மாநிலங்களில் வாக்களிப்பவர்களாக உள்ளனர். இருப்பினும், மாநிலத்தில் வர்த்தக பங்கிற்கு அவர்களது பங்களிப்பு அதிகம்.

தேர்தலுக்கு ஏற்ப முடிவை மாற்றும் டெல்லி வாக்காளர்கள்

இப்படி ஒரு மக்கள்தொகையை கொண்டுள்ள டெல்லியில் சட்டமன்ற தேர்தலுக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் வெவ்வேறு விதமாக ஏன் மக்கள் வாக்களிக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது. ஒரு கட்சி மாநில தேர்தலுக்கு உகந்தது என்றால் தேசிய தேர்தலுக்கு சரிப்பட்டு வராதா? டெல்லி மக்கள் சட்டமன்ற தேர்தலுக்கு கொடுக்கும் ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏன் கொடுக்க மறுக்கின்றனர்?.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து டெல்லியில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி டெல்லி சட்டசபையில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகிறது. இந்த கதை பிப்ரவரி 5 ஆம் தேதி மீண்டும் நிகழ வாய்ப்புள்ளது. அத்துடன், பாஜகவின் சூழ்ச்சிகளால் துன்புறுத்தப்பட்ட ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தலில் இந்த விவகாரம் கைகொடுக்கும்.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்

பாஜக மற்றும் காங்கிரஸைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சிக்கு கடந்த காலத்தில் கிடைத்த வாக்குகள் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், ஆம் ஆத்மி 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவை இந்த தேர்தலில் பெறும். காங்கிரஸ் 4 சதவீத வாக்குகளை பெறும். பாஜகவுக்கு 30 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

காங்கிரஸ் வைக்கும் குறி

இம்முறை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸும், பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு செலுத்தியவர்கள் தமது பக்கம் நிற்பார்கள் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் பா.ஜ.க இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவளித்த முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் வாக்குகளுக்கு காங்கிரஸ் குறிவைக்கிறது.

டெல்லியில் தங்களின் பாரம்பரிய ஆதரவை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் முயற்சியாக உள்ளது. அதே சமயம், இலவச திட்டங்களை கொண்ட ஆம் ஆத்மி எந்த சமூகத்தின் மீதும் பாகுபாடு காட்டவில்லை என்பது சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரரீதியாக சவாலை எதிர்கொள்ளும் தொழிலாளர் வர்க்கத்தை ஈர்க்கிறது.

அதே சமயம் ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஏற்பட்ட படு தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மேற்கண்ட மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியதற்கு ஆம் ஆத்மிதான் காரணம் என சொல்கின்றனர். காங்கிரசுக்கு செல்லக்கூடிய வாக்குகள் ஆம் ஆத்மி பக்கம் திரும்பியதாம்.

ஆம் ஆத்மி செல்வாக்கு

இம்முறை முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளை ஈர்க்க முயற்சிக்கும் காங்கிரசுக்கு ராகுல் காந்தியின் வலுவான பிரச்சாரம் சாதகமாக பலனளிக்கும் என்று நம்புகின்றனர். ஆனால், இலவசங்களை அளித்து வரும் ஆம் ஆத்மிக்கு மக்கள் ஆதரவு அதிகமுள்ளதால் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் வாக்குகளை ஈர்ப்பது அவ்வளவு எளிதல்ல. பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும், தனது வாக்குகளை உள்ளூர் கட்சிக்கு மாற்றினால் கூட, ஆம் ஆத்மியின் வெற்றியை தவிர்க்க முடியாது என்ற வலுவான கருத்தும் உள்ளது.

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், ஏராளமான இலவசங்களை வழங்குவதைத் தவிர, டெல்லி மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவோம் என்பதை எந்தக் கட்சியும் வெளிப்படுத்தவில்லை. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பற்றி காங்கிரஸ் பேசினாலும், டெல்லி மக்கள் இழந்த நல்ல காற்றை எப்படி திரும்ப பெறுவார்கள் என்பது பற்றி எந்த திட்டமும் இல்லை.

மேலும், டெல்லி தண்ணீரை ஹரியானா விஷமாக்குகிறது என்ற குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி தலைவரிடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளது. ஆனால், தண்ணீரை தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து எந்த திட்டமும் இல்லை.

உண்மை என்னவென்றால், டெல்லி மாசுபாட்டிற்கு குறுகிய காலத்துக்கோ அல்லது விரைவாகவோ எந்த தீர்வும் இல்லை. இந்த பிரச்சனை முடிவில்லா வருவாய்க்கு காரணமாக இருப்பதால் அரசியல் களம் மாசுபாட்டை விரும்புகிறது என்பதுதான் உண்மை.

சஞ்சய் கபூர்

(பொறுப்புத்துறப்பு இந்த கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள் எழுத்தாளரை சார்ந்ததாகும். இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துகள், உண்மைகள் ஈடிவி பாரத்தின் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பவை அல்ல)

Last Updated : Feb 3, 2025, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.