திருப்பதி:உலகபுகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்தநிலையில் லட்டில் விலங்களின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆய்வக பரிசோதனையிலும் அது உறுதி செய்யப்பட்ட நிலையில் தேவஸ்தான போர்டும் அதை ஒப்புக்கொண்டது.
இது ஒட்டுமொத்த பக்தர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோயிலைத் தூய்மைப்படுத்தி புனிதத்தன்மையை மீட்டெடுக்கும் நோக்கில் அந்த ஹோமம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை 6 மணிக்கு நெய்யில் செய்யப்பட்ட கலப்படத்தால் விளைந்த பாவத்தைப் போக்கும் வகையில், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள யாகசாலையில் மூன்று ஹோமகுண்டங்கள் நிறுவப்பட்டு, ஹோமம் நடத்தப்பட்டது.
இந்த யாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் உள்ளிட்ட அதிகாரிகளும் பூசாரிகளும் அந்த ஹோமத்தில் பங்கேற்றனர். இது குறித்து செயல் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,"லட்டில் கலப்படம் நடந்தால் அதற்கு பரிகாரமாகவும், பக்தர்களிடையே உள்ள கவலையை போக்கவும் சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது.