புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஜெய் கிஷன், குல்தீப் கட்டாரா மற்றும் கிருஷ்ணா கட்டாரா ஆகிய மூன்று பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை கடந்தாண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மூன்று பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மனுவில், இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான சொத்து தகராறு தொடர்பாக மூன்று எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், குற்றச்சாட்டுகள் சிவில் பிரிவுகளில் வருவதாக குறிப்பிட்டு சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர்.
அந்த வழங்கின் விசாரணை நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ''சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற விருப்புரிமையை வழங்குவது என்பது விவேகமற்ற செயலாகும். ஒரு தண்டனை மிக கடுமையானது என்று கருத்தப்பட்டால் அதன் தேவையும், முக்கியத்துவமும் அதிகமாக இருக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவு தனி மனிதன் சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்கிறது. குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட காரணத்துக்காக ஒருவரது வாழ்க்கை மற்றும் சுதந்திரமாக வாழும் உரிமையை புறக்கணிக்க முடியாது'' என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வக்பு திருத்த மசோதா; கூட்டுக் குழு அறிக்கை மாநிலங்களவையில் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது!
மேலும், உத்தரப்பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1986 கீழ் மூவர் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இது சாதாரண வழக்க அல்ல மிக தீவிரமான வழக்காகும். இந்த மூன்று கிரிமினல் வழக்குகள் தெளிவற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. எஃப்ஐஆரை ஆய்வு செய்ததில், சில சொத்து மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான குற்றசாட்டுகள் தெரிய வருகிறது என கூறி எஃப்ஐஆரை ரத்து செய்து உத்தரவிட்டனர்.