புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
மத்திய அரசு பல்வேறு திருத்தங்களுடன் வக்பு சட்ட திருத்த மசோதாவை கடந்தாண்டு கொண்டு வந்தது. அப்போது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதனால் மசோதா ஆய்வுக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு ஜகதாம்பிகா பால் தலைமை தாங்கினார்.
இந்நிலையில், வக்பு திருத்த மசோதா இறுதி செய்யப்பட்டு கடந்த ஜன.30 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஜகதாம்பிகா பால் வழங்கினார். பெரும்பான்மை வாக்குகளால் திருத்தப்பட்ட மசோதாவும், வரைவு அறிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: இலவச திட்டங்கள் அறிவிக்கும் நடைமுறையை ஏற்றுகொள்ள முடியாது...உச்ச நீதிமன்றம் கருத்து!
இந்நிலையில் இன்று (பிப்.13) வக்பு திருத்த மசோதா மீதான கூட்டுக் குழு அறிக்கை மாநிலங்களவையில் சமர்பிக்கப்படவுள்ளது. குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பால், பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் இணைந்து ஆதாரங்களின் பதிவையும் சேர்த்து அறிக்கையை சமர்பிக்கவுள்ளனர். அதன் பின்னர் மாநிலங்களவையில் இந்த அறிக்கை உறுப்பினர்கள் மேதா விஷ்ராம் குல்கர்னி மற்றும் குலாம் அலி ஆகியோரால் தாக்கல் செய்யப்படவுள்ளது.