பெங்களூரு :கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கடசியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் முன்னதாக இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணா இன்று (மே.31) அதிகாலை பெங்களூரு விமான நிலையத்திற்கு விரைந்த நிலையில், அவரை கைது செய்தனர்.