ETV Bharat / entertainment

ஜனநாயகத்தை காக்கும் விஜய்...? வெளியானது விஜய்யின் ’ஜனநாயகன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - JANANAYAGAN FIRST LOOK POSTER

Jana Nayagan First Look Poster: நடிகர் விஜய்யின் ’தளபதி 69’ இன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ’ஜனநாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் பட போஸ்டர்
ஜனநாயகன் பட போஸ்டர் (Credits - @KvnProductions X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 26, 2025, 11:24 AM IST

Updated : Jan 26, 2025, 11:30 AM IST

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் ’தளபதி 69’ இன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி படமான இதற்கு ’ஜனநாயகன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய் இந்த படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார். அதனால் 'தளபதி 69’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ’தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு குடியரசு தினத்தன்று வெளியாவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கேவின் புரொடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை ’ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அரசியல் மாநாடு ஒன்றில் தொண்டர்களுடன் செல்ஃபி எடுப்பது போல ஜனநாயகன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த போஸ்டர் விஜய்யின் சர்கார் திரைப்படத்தை நினவூட்டும் விதமாக உள்ளது. மேலும் விஜய்யின் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் அரசியல் பயணத்தை குறிக்கும் விதமாகவும் இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தை கேவின் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்பான கடைசி படம் என்பதால் கண்டிப்பாக அரசியல் கருத்துகள் அடங்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனநாயகன் என்ற தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.

கடந்த இரண்டு நாட்களாக படத்தின் தலைப்பு பற்றி பலரும் இணையத்தில் பல விஷயங்களை கூறி வந்தனர். 1992ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படத்தின் தலைப்பான நாளைய தீர்ப்பு தான் இந்த படத்தின் தலைப்பாக இருக்கும் எனும் கருத்தும் பரவி வந்தது. இந்நிலையில் தளபதி 69 படத்தின் தலைப்பு ’ஜனநாயகன்’ என அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பத்ம பூஷன் விருது: "மனைவியும், தோழியுமான ஷாலினிக்கு நன்றி" - நடிகர் அஜித்!

இந்நிலையில் ’தளபதி 69’ படமானது தெலுங்கில் வெளிவந்த நடிகர் பாலைய்யாவின் ’பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் ரிமேக் என்ற யுகமும் இணையத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்தில் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அந்த படத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல் அமைந்துள்ளது.

மேலும் இயக்குநர் ஹெச்.வினோத்தால் நடிகர் கமல்ஹாசனுக்கு சொல்லப்பட்ட கதைதான் தற்போது விஜய்யை வைத்து திரைப்படமாக உருவாகியுள்ளது என இதற்கு முன்பு பேசப்பட்டு வந்தது. ஆனால் அதுவாக இருக்குமா எனவும் தெரியவில்லை. ஆனால் முதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டரில் ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் குறித்த யுகங்களும் எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Last Updated : Jan 26, 2025, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.