தமிழ்நாடு

tamil nadu

தன்பாலின வன்கொடுமை வழக்கு: சுரஜ் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் சிஐடி காவல் - நீதிமன்றம்! - Suraj Revanna

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 6:29 PM IST

தன்பாலின வன்கொடுமை வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்சி சுரஜ் ரேவண்ணாவின் சிஐடி காவலை ஜூலை 1ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

Etv Bharat
JD(S) MLC Suraj Revanna (ETV Bharat)

பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்சி சுரஜ் ரேவண்ணா மீது அதே கட்சியை சேர்ந்த இளைஞர் தன்பாலின சேர்க்கை புகார் அளித்தார். அரகலகூடு டவுன் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர், கடந்த ஜூன் 16ஆம் தேதி கன்னிகாடா பகுதியில் உள்ள சுரஜ் ரேவண்ணாவின் பண்ணை வீட்டில் வைத்து தன்பாலின ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக இளைஞர் அளித்த புகாரில் ஹோலேநரசிபுரா போலீசார் சுரஜ் ரேவண்னா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து சுரஜ் ரேவண்ணா சிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டார். எப்ஐஆர் பதிவு செய்து சுரஜ் ரேவண்ணாவை கைது செய்த சிஐடி போலீசர் இன்று (ஜூன்.24) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

மேலும், தன்பாலின ரீதியில் இளைஞருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சுரஜ் ரேவண்ணாவை காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபது சுரஜ் ரேவண்ணாவை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சிஐடி போலீசார் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இளைஞரின் புகார் குறித்து நீண்ட விசாரணை தேவைப்படுவதாவும், ஹசன் பகுதியில் சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளதால், அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ரீதியிலான பரிசோதனை நடத்தப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என வாதிட்டார்.

சம்பவம் தொடர்பாக செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள வாட்ஸ் அப் சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இரண்டாது தர குற்றம்சாட்டப்பட்டவரும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால் வழக்கு குறித்து விசாரிக்க 14 நாட்கள் காவல் அளிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சுரஜ் ரேவண்ணாவை ஜூலை 1ஆம் தேதி வரை சிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். சிறப்பு நீதிமன்றத்தில் சுரஜ் ரேவண்னா ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கிடைத்ததை அடுத்து பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:"டெல்லியின் தண்ணீர் பிரச்சினை தீரும் வரை உண்ணாவிரதம் தொடரும்"- அமைச்சர் அதிஷி! - Atishi hunger strike

ABOUT THE AUTHOR

...view details