ETV Bharat / state

“பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகம்” - அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் விளக்கம்! - BUDGET 2025 REVIEW

படித்த இளைஞர்களின் வேலைத் திறனை அதிகரித்து, வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் இளைஞர்களின் பட்ஜெட் 2025இல் பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன என மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் முத்துராஜா தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பேராசிரியர் முத்துராஜா
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பேராசிரியர் முத்துராஜா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2025, 12:38 PM IST

மதுரை: இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்காக அதிகமாக அந்நியக் கடன்களைப் பெறுவதைக் குறைப்பதுடன், நிதிப்பற்றாக்குறையை குறைந்தபட்சம் 4 விழுக்காடாகக் குறைக்க முயன்றால், நாட்டின் வளர்ச்சி இன்னும் சிறப்பாக அமையும் என்று பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் முத்துராஜா கூறியுள்ளார்.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு 2025-26ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் முத்துராஜா கூறுகையில், “நேற்று சமர்ப்பிக்கப்பட்ட இந்திய பொருளாதார ஆய்வறிக்கையில் மிக முக்கியமாக மூன்று கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

பணவீக்கம் மற்றும் விலைவாசி அதிகரிப்பு:

பட்ஜெட்டில் பணவீக்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால், விலைவாசி அதிகரிப்பதோடு, மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. இதனால் பொருளாதாரத் தேக்கநிலை உருவாகும். இரண்டாவதாக, அந்நியச் செலாவணி கையிருப்பு. அடுத்த 11 மாதங்களுக்கு இறக்குமதியைச் சரி செய்வதற்கான கையிருப்பு இருக்கிறது என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை. ஏனென்றால், அதிகமான அளவில் அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லை என்பதுதான் இதன் பொருள்.

இதனைத் தவிர்க்க நமது உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். இதில் நாட்டின் வளர்ச்சியும், அந்த வளர்ச்சி எல்லோரையும் சென்றடைவது என்ற இரண்டு விசயங்கள் மிக முக்கியமாகும். இந்திய அரசின் வரவு, செலவு திட்டத்தை பொருளாதார மாணவனாக வரவேற்கிறேன். காரணம், கடந்த 10-15 ஆண்டுகளாக இந்தியாவில் பணவீக்கம், பெண்களுக்கான வாய்ப்பு, கிராமப்புற முன்னேற்றம், இளைஞர்களுக்கான வாய்ப்பு, தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலை போன்ற பல்வேறு கவலைகளைக் கொண்டிருந்த நேரத்தில், அவற்றையெல்லாம் போக்கும்விதமாக இந்த வரவு, செலவுத் திட்டம் அமைந்துள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்பொழுது, ஐந்து விசயங்களைப் பட்டியலிட்டார். அதில் இரண்டு முக்கியமானதாகும். அது வளர்ச்சி மற்றும் சமச்சீரான வளர்ச்சி ஆகியவை. இதில், நாம் எதிர்பார்த்தது 8 விழுக்காடு வளர்ச்சி. குறைந்தபட்சம் 7 விழுக்காடாவது இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், மாறாக 6.4 - 6.8ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமச்சீரான வளர்ச்சி:

நமது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தது போன்று இல்லை என்பதுதான் இதன் பொருள். ஆனால், இதில் நேர்மறையான அம்சம் என்னவெனில், வளர்ச்சியடைந்த உலக நாடுகளே கூட 2லிருந்து 3 விழுக்காடு வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் 6.4 - 6.8ஆக இருப்பது சற்று ஆறுதல் தரக்கூடிய ஒன்று.

ஆனால், சமச்சீரான வளர்ச்சி என்பது மாநிலங்கள் இடையே, கிராமம், நகரங்களிடையே, ஆண், பெண் இடையே என்று அணுகும்போது அதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. இதனைக் களையும்போதுதான், சமச்சீரான வளர்ச்சி என்பது சாத்தியம். அதனைக் களையும் வகையில்தான் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

வேறுபாடுகள் களைய முயற்சி:

இந்த பட்ஜெட்டுக்கான பாலிசி என்பதைப் பார்க்கும்போது, வேளாண்மைக்கு இந்த முறை அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இது நடைபெற்றுள்ளது. வேளாண் தொழில் நுட்பம், பெண்களுக்கான முன்னேற்றம், வேளாண் சார்ந்த தொழில் முனைவு உள்ளிட்ட அனைத்திலும் அரசின் பலன்கள் வேளாண் சார்ந்த விசயங்களுக்குச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விசயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, கிராம மயமாக்கல் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை மட்டுமன்றி, தினக்கூலிகளின் வாழ்வாதார மேம்பாடு உள்பட பல முன்னெடுப்புகள் அடங்கியுள்ளன. இதன் மூலம் நகரத்திற்கும் கிராமத்திற்குமான வேறுபாடுகளை களைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேராசிரியர் முத்துராஜா பேட்டி (ETV Bharat Tamil Nadu)

கிராமங்கள் சார்ந்த அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. கிராமங்களின் வளர்ச்சி இல்லாவிட்டால், சேவைத்துறையில் நகர்ப்புறங்களின் வளர்ச்சியும் பின்னோக்கிச் செல்லக்கூடிய சூழல் உருவாகும் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. கிராமங்கள் முன்னேறுவதே சமச்சீரான வளர்ச்சியின் அடிப்படை அலகாகும்.

பெண்களின் பங்களிப்பு முக்கியம்: பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதனை உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. நிதி ஆயோக் கூட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இது வலியுறுத்தப்பட்டும் வருகிறது. பல விசயங்களை உள்ளடக்கி பெண்கள் மேம்பாட்டை வலியுறுத்துகின்ற பட்ஜெட்டாக இது அமைந்திருப்பதை நாம் காணலாம்.

வேலைவாய்ப்பு:

அடுத்ததாக இளைஞர்களின் மேம்பாடு. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்ற நிலை உள்ளது. அவர்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்கவும், இளைஞர்களின் வேலைத் திறனை அதிகரிக்கவும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கிராமங்களில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டிற்கான அறிவிப்புகள் நிறைய உள்ளன. இது உண்மையிலேயே பாராட்டிற்குரியது.

அதேபோன்று சேவைத்துறையில் பணியாற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்புக் கட்டமைப்பு இல்லை. முதல் தடவையாக இந்த பட்ஜெட்டில் அவர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு காரணம் அவர்களின் பங்களிப்பு அதிகம். ஆனால் அதற்கான அங்கீகாரம் இல்லை. அது குறித்த அக்கறை வெளிப்பட்டுள்ளது.

வருமான வரி விலக்கு:

மேலும் வருமான வரிக்கு ரூ.12 லட்சம் வரை விலக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த வரிச்சலுகையின் மூலமாகக் கிடைக்கக்கூடிய பலனை, அவர்கள் கல்வி, மருத்துவம், சேமிப்பிற்கு அதிகம் பயன்படுத்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வரிகளைக் குறைப்பதன் மூலமாக தனிநபர் குடும்பங்களின் வளர்ச்சிக்கான சூழல் உருவாகியுள்ளது.

அதுமட்டுமன்றி அறிவிக்கப்பட்டுள்ள பசுமைத் திட்டங்களின் வாயிலாக பருவநிலை மாற்றத்திற்கு ஒத்திசைவான நிலையை உருவாக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, நாடு முழுவதும் வேளாண் தொழில்நுட்ப மேம்பாட்டினை மையப்படுத்தி 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கே புத்தாக்க வேளாண் முறைகளை, உத்திகளை, நவீன வடிவங்களைப் பயன்படுத்தி மாதிரி வேளாண் மாவட்டங்களாக அறிவிக்க திட்டம் வகுத்திருப்பது வரவேற்கத்தக்கது.. பாராட்டத்தக்கது.

இதையும் படிங்க: பட்ஜெட் 2025: வளர்ச்சியை நோக்கி உள்ளது.. தொழில்துறை வல்லுநர்கள் வரவேற்பு!

பட்ஜெட்டின் மறுபுறம்:

ஆனால், இந்த பட்ஜெட்டில் சில கவலைகளும் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒட்டுமொத்த இந்தியா என்று பார்க்கும்போது மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் இப்போதும் உள்ளன. அதைக் களைவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொருளாதார, சமூக வேறுபாடுகளைக் களைவதற்கான சிறப்புத் திட்டங்கள் அறிவித்திருக்கலாம். மேலும், நிதிப்பற்றாக்குறை 4.8 விழுக்காடாக உள்ளது. இது சரியான பொருளாதாரத்திற்கான அறிகுறி அல்ல.

அதை குறைத்தாக வேண்டும். குறைந்தபட்சம் 4 விழுக்காடாகக் குறைக்க முயற்சி மேற்கொள்வது அவசியம். அதிகமான அந்நியக்கடன் இதற்கு முக்கியக் காரணமாக இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். இந்த கடனுக்கான வட்டியையும், முதல்-யையும் டாலரில்தான் நாம் கட்டியாக வேண்டும். ஆகையால் இந்த நாட்டிலுள்ள மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அனைத்தும் அந்நிய நாடுகளுக்குச் சென்றுவிடக்கூடாது. அந்நியக் கடன்களையும், நிதிப்பற்றாக்குறையையும் குறைப்பது மிக மிக அவசியம். மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பொருளாதார வேறுபாடுகளை களையும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.