உத்தர பிரதேசம் :காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவது பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை வெற்றிகரமாக காஷ்மீரில் நிறைவு செய்யப்பட்டது. கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து, இரண்டாவது கட்டமாக ராகுல் காந்தி பாரத் நியாய யாத்திரையில் ஈடிபட்டு உள்ளார். மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக சென்று தனது பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டு உள்ளார்.
இந்நிலையில், பாரத் நியாய யாத்திரையின் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம் அமேதிக்கு ராகுல் காந்தி செல்கிறார். அதைத் தொடர்ந்து காந்தி குடும்பத்திற்கு மிக நெருங்கிய ரேபரலிக்கும் ராகுல் காந்தி செல்ல திட்டமிட்டு உள்ளார். இந்நிலையில், தொகுதி பங்கீடு முடிவு செய்யாத பட்சத்தில் ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரையில் கலந்து கொள்ளப் போவதில்லை என உத்தர பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ளப் போவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது,