ETV Bharat / bharat

கேட்காமலேயே பிரணாப்புக்கு நினைவிடம் அமைக்கும் மத்திய அரசு...மகள் நெகிழ்ச்சி! - MEMORIAL FOR PRANAB MUKHERJEE

கோரிக்கை விடுக்காமல் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு முன் வந்திருப்பதாக அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த பிரணாப் முகர்ஜி
முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த பிரணாப் முகர்ஜி (Image credits-ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 23 hours ago

புதுடெல்லி: கோரிக்கை விடுக்காமல் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு முன் வந்திருப்பதாக அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி,"என்னுடைய தந்தைக்கு நினைவிடம் உருவாக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு என் இதயத்தில் இருந்து நன்றி தெரிவிப்பதற்காக நன்றியை வெளிப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தேன். நினைவிடம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்காவிட்டாலும், இது மிகவும் விரும்பத்தகுந்தது என்று கருத்தில் கொள்ள வேண்டும். பிரதமரின் இந்த எதிர்பாராத, ஆனால் உண்மையிலேயே கருணையுள்ள செயலால் நான் மிகவும் மகிழ்ந்தேன்.

கவுரவத்தை கேட்டுப் பெறக்கூடாது என்று எப்போதுமே தந்தை (பிரணாப் முகர்ஜி) சொல்வார். இதுவும் கூட அவ்வாறு வழங்கப்பட்டதுதான். என் தந்தையின் நினைவுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி இதனை மேற்கொண்டதற்கு நான்மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றேன். இதனை வரவேற்பதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ அப்பாற்பட்ட இடத்தில் என் தந்தை இருக்கிறார். எனவே இது என் தந்தையை பாதிக்காது. ஆனால்,அவரின் மகளாக என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை,"என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கம்யூனிச தலைவர்கள் சுயநலத்தால் கம்யூனிச கொள்கை நீர்த்துப் போய்விட்டது - ஆ. ராசா சர்ச்சை பேச்சு!

பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜிக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில்,"இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த பிரணாப் முகர்ஜிக்கு ஒரு சமாதி அமைப்பதற்காக ராஷ்டிரிய ஸ்மிருதி (ராஜ்காட் வளாகத்தின் ஒரு பகுதி) வளாகத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்டதுறை அனுமதி அளித்திருக்கிறது,"எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம்,தேச கட்டமைப்பு குறித்து பிரணாப் முகர்ஜி பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது கடந்த 2008ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. சிறந்த நாடாளுமான்றவாதி விருது கடந்த 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.இந்தியாவின் சிறந்த நிர்வாகி விருது கடந்த 2011ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, மத்திய நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.