ETV Bharat / state

அண்ணா நகர் சிறுமி வழக்கு: அதிமுக நிர்வாகி உட்பட இருவர் கைது! - ANNA NAGAR CHILD ABUSE CASE

சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக நிர்வாகி மற்றும் பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 19 hours ago

Updated : 14 hours ago

சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சதீஷ் என்ற இளைஞர் மற்றும் 16 வயது சிறுவன் மீது அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அப்போது, காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான போக்சோ வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, தமிழகத்தில் உள்ள வெளிமாநில 7 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜமன் ஜமால், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இதையும் படிங்க: காவல்துறை டூ உச்சநீதிமன்றம்: அண்ணாநகர் சிறுமி போக்சோ வழக்கு.. கடந்து வந்த பாதை!

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் உயிருக்கு ஆபத்து.. ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்..!

இந்த வழக்கின் விசாரணையில் 16 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற இளைஞர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக அதிமுக நிர்வாகி சுதாகர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததாக அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கை முதலில் விசாரித்த அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதாலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை புகாரிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ததும் தெரிய வந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, கைது செய்யப்பட்ட வட்ட செயலாளர் சுதாகர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ராஜி ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரையும் சிறையில் அடைத்தனர்

Last Updated : 14 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.