ETV Bharat / spiritual

வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும்.. இன்றைய ராசிபலன்! - TODAY RASIPALAN IN TAMIL

ஜனவரி எட்டாம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 18 hours ago

மேஷம்: பழைய நினைவுகள் இன்று உங்களை சூழ்ந்து கொள்ளலாம். மிக அமைதியாக இருப்பீர்கள். அது உங்கள் அனைத்து பணிகளிலும் வெளிப்படும். செலவுகளை சிறிது கட்டுப்படுத்துவீர்கள். எதிர்காலத்துக்கான சேமிப்பின் அவசியத்தை உணர்வீர்கள்.

ரிஷபம்: சிறிது கடுமையாகவும், ஆளுமையுடனும் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்வீர்கள். இருப்பினும், இதை உறுதி செய்து கொள்ளவும். அதோடு, நீங்கள் சந்திக்கும் மக்களிடம் இணக்கமாக நடந்து கொள்ளவும். பெரிய முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். வழக்கமான நாட்களைப் போலவே இன்று செயல்படவும்.

மிதுனம்: உங்களது கோபமான மன நிலையின் காரணமாக, மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். விரோதம் காரணமாக, உங்களது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள். எனினும், நீங்கள் அவர்களை வென்று விடுவீர்கள். உங்களது அறிவுத்திறன் காரணமாக அவர்கள் உங்களுடன் மோதுவதை நிறுத்திவிடுவார்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கடகம்: புதிய பொறுப்புகள் வரும், அதில் மூழ்குவதால் நீங்கள் இன்று சோர்வாக இருப்பதை உணர்வீர்கள். மேலும், அதில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தை உணர்வீர்கள்.

சிம்மம்: புதிதாக எதையாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கும். இன்று முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். உங்களது ஆற்றல் மற்றும் ஆர்வத்தின் காரணமாக வெற்றி கிட்டும். கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன. அதனால், சவால்களை ஏற்றுக்கொண்டு, அதனை நிறைவேற்ற முயற்சி செய்யலாம்.

கன்னி: இன்று, செலவுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கக்கூடும். அதிகப் பண விரயம் ஏற்படலாம். எனினும், விஷயங்கள் சாதகமாக நடக்கும் வாய்ப்புள்ளது. அதனை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் தொழில் ரீதியாகவும் மேம்படுவீர்கள்.

துலாம்: உங்களது ஆளுமைப் பண்பை மேம்படுத்திக்கொண்டு, பணியில் உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான சரியான நேரம் இதுவாகும். இன்று, நீங்கள் புதிய ஆடைகளை வாங்கும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று நீங்கள், உங்கள் கனவு உலகில் நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்: அனைத்து வகையிலும் இன்று உங்களுக்கு ஒரு கசப்பான உணர்வை தரும் நாளாக இருக்கும். நீங்கள் பெரும் முயற்சி எடுத்தாலும் கூட, இதனைத் தவிர்ப்பது சிறிது கடினம். எந்த வகையான பிரச்சனைகள் மற்றும் சச்சரவுகளிலிருந்து விலகி இருப்பது நல்லது. எனினும் இன்று மாலை, உங்களுக்கு சிறிது ஆறுதல் கிடைக்கும்.

தனுசு: இன்று நீங்கள் முழுமையான மன எழுச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் விரும்பும் ஒன்றை அடைவீர்கள். ஏதேனும் நிகழ்ச்சிகளில் மைய நாயகனாக உங்களை ஆக்கினால் ஆச்சரியப்படாதீர்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்து தயாராக இருங்கள்.

மகரம்: நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகள் மற்றும் திட்டங்கள் அதிகம் இருக்கும். வேலைகளை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவு செய்து, புத்துணர்ச்சி பெற அமைதியாக சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். பலதரப்பட்ட மக்களுடன் தொடர்பு கொள்வது உங்களது அறிவை விரிவாக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சுதந்திரமாக செயல்படுவீர்கள்.

கும்பம்: விஷயங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் இருந்தாலும், நீங்கள் சோர்வடையாமல் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். நிதானமாக முன்னேறுவது வெற்றியைத் தரும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் திறன் உள்ளது. நிதி நிலைமை நல்ல நிலையில் தான் இருக்கும்.

மீனம்: வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கக்கூடும். அதனால் பண விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். புதிய பணி அல்லது புதிய ஒப்பந்தம் அல்லது புதிய திட்டங்களை தொடங்குவதற்கு இது உகந்த நாள் அல்ல. இரண்டு அல்லது சில நாட்களில் நிலைமை சீராகும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.