ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e) சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. பிரத்யேக எஸ்.இ ரக மாடல்களை புறந்தள்ளிவிட்டு, புதிதாக ‘e’ என்ற வரிசையை நிறுவனம் கொண்டு வந்துள்ளது. ஆப்பிளின் பட்ஜெட் மொபைலாக இது வர்த்தகம் செய்யப்படுகிறது.
புதிய மலிவு விலை ஐபோன் ரூ.59,900 என்ற விலை முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில், புதிய போனின் அம்சங்கள் என்ன, இது பிரீமியம் ஐபோன் 16-இல் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.
ஆப்பிள் ஐபோன் 16இ விலை
மொத்தமாக மூன்று வகைகளில் ஆப்பிள் ஐபோன் 16இ போன்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி என்ற ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும் இந்த போனின் தொடக்க விலை ரூ.59,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முறையே, ரூ.69,990, ரூ.89,990 விலையில் இதன் மேம்பட்ட வகைகளை வாங்கலாம்.
ஐபோன் 16இ | விலை |
128ஜிபி | ரூ.59,990 |
256ஜிபி | ரூ.69,990 |
512ஜிபி | ரூ.89,990 |
பிப்ரவரி 21, 2025 மாலை 6:30 முதல் இதற்கான முன்பதிவு தொடங்கியதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. ஆப்பிள் ஆன்லைன், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் அல்லது பிரத்யேக விற்பனை முகவர்களின் கடைகள் வாயிலாக ‘ஐபோன் 16இ’ மொபைலை முன்பதிவு செய்யலாம்.
ஆப்பிள் ஐபோன் 16இ சலுகைகள்
ஆப்பிள் இணையதளத்தின் வாயிலாக வாங்கும், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி பயனர்களுக்கு ரூ.4,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும், பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.76,500 வரை கூடுதல் சலுகைகள் கிடைக்கிறது.
Meet iPhone 16e, the newest member of the iPhone 16 family! #AppleLaunch pic.twitter.com/q9BHWxdYtN
— Tim Cook (@tim_cook) February 19, 2025
இவை அல்லாமல், ஐபோன் 16இ உடன் சில ஆப்பிள் தளங்களுக்கான இலவச அணுகலையும் நிறுவனம் வழங்குகிறது. அதன்படி, ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் ஆர்கேட் ஆகியவற்றுக்கான மூன்று மாத இலவச அணுகலை பயனர்கள் அனுபவிக்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 16இ Vs 16 அம்சங்கள்
ஆப்பிள் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16இ விலைகளின் இடையே ரூ.20,000 வித்தியாசம் உள்ளது. இந்த நிலையில், இரண்டு போன்களின் அடிப்படை அம்சங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் வழியாக எந்த ஐபோனை வாங்கலாம் என்ற குழப்பத்தைத் தவிர்க்க முடியும்.
இதையும் படிங்க: ஐபோனின் முதல் ஆபாச செயலி? கவலையில் ஆப்பிள்; எபிக் கேம்ஸ் சாடல்! |
முதலில், இரண்டு போனுக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடுகளை பார்க்கலாம். அதன்படி, ஐபோன் 16 ஐலேன்டு டிஸ்ப்ளே உடன் வருகிறது; 16இ மாடலில் பழைய நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் ஏ18 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் புராசசிங் யூனிட்டில் மட்டும் ஐபோன் 16 மாடலில் கூடுதலாக ஒரு கோர் இணைக்கப்பட்டிருக்கும்.

ஐபோன் 16 | ஐபோன் 16இ |
6.1” சூப்பர் ரெட்டினா XDR திரை | 6.1” சூப்பர் ரெட்டினா XDR திரை |
5 கோர் ஏ18 சிப்செட் | 4 கோர் ஏ18 சிப்செட் |
அலுமினிய கட்டமைப்பு | அலுமினிய கட்டமைப்பு |
ஆக்ஷன் பட்டன் | ஆக்ஷன் பட்டன் |
பின்பக்க கண்ணாடி அமைப்பு | பின்பக்க கண்ணாடி அமைப்பு |
ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் | ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் |
48 மெ.பி + 12 மெ.பி அல்ட்ராவைட் | 48 மெ.பி |
டைனமிக் ஐலேண்டு | நாட்ச் |
22 மணிநேர வீடியோ பார்வைகளை தாங்கும் பேட்டரி | 26 மணிநேர வீடியோ பார்வைகளை தாங்கும் பேட்டரி |
டைப்-சி (2.0) | டைப்-சி (2.0) |
ஃபேஸ்-ஐடி | ஃபேஸ்-ஐடி |
வயர்லெஸ் சார்ஜிங் | வயர்லெஸ் சார்ஜிங் |
170 கிராம் எடை | 167 கிராம் எடை |
ஐபி68 பாதுகாப்பு | ஐபி68 பாதுகாப்பு |
கேமராவைப் பொருத்தவரை ஐபோன் 16இ போனில் ஒரு 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா வழங்கப்படுகிறது. 16 மாடலில் கூடுதலாக 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா இருக்கிறது. பேட்டரித் திறனைப் பொருத்தவரை, 16இ போனானது 26 மணிநேர பயன்பாடு நேரத்தைப் பெறுகிறது. ஆனால், 16 மாடலில் 22 மணிநேரம் மட்டுமே பயன்பாடு நேரமாக இருக்கிறது. இவை பயனர்களுக்கு இடையே மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.