ETV Bharat / bharat

டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு! - DELHI ASSEMBLY ELECTIONS

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பிரதிநித்துவப்படம்
பிரதிநித்துவப்படம் (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 3:00 PM IST

Updated : 23 hours ago

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், "இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கி வருகிறது. டெல்லியில் மொத்த வாக்காளர்கள் 1.55 கோடி பேராக உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 83.5 லட்சம் பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 73.7 லட்சமாக உள்ளது. டெல்லியில் 13,033 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு: டெல்லி சட்டப்பேரவையில் முதன்முறை வாக்களிக்கும் வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. உரிய முறைப்படி டெல்லி வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு போலியாக இணைக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். உண்மையான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் முறைகேடு என்பதற்கே இடம் இல்லை.

இளைஞர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.வேட்பு மனுதாக்கல் வரும் 10ஆம் தேதி தொடங்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜனவரி 17ஆம் தேதி கடைசிநாளாகும். வேட்பு மனுக்கள் மீதான ஆய்வு ஜனவரி 18ஆம் தேதி நடைபெறும் வேட்புனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 20ஆம் தேதியாகும். 70 தொகுகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகும்,"என்று கூறியுள்ளார்.

தேர்தல் நடைமுறைகள் நடைபெறும் தேதி
வேட்பு மனுதாக்கல் 10-01-25
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள்17-01-25
வேட்பு மனு பரிசீலனை18-01-25
வேட்புனுவை திரும்பப் பெற கடைசி நாள்20-01-25
வாக்குப்பதிவு 05-02-25
வாக்கு எண்ணிக்கை08-02-25

மும்முனைப் போட்டி: டெல்லி சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. எனவே இப்போதைய நிலவரப்படி அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலைப் பொறுத்தவரை 70 தொகுதிகளுக்கும் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. பாஜக 29 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளுக்கும் வாட்பாளர்களை அறிவித்திருக்கிறது. தற்போதைய டெல்லி சட்டப்பேரவை பதவி காலம் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி முடிவடைகிறது.

பாஜக, காங்கிரஸ் ஆட்சிகள்: கடந்த 1993ஆம்ஆண்டு முதல் 1998 வரை டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் பாஜக சார்பில் மூன்று முதலமைச்சர்கள் பதவியில் இருந்தனர். டெல்லியில் இதுவரை 5 முறை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக கடந்த 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2013ஆம் ஆண்டு டிசம்பர் வரை 15 ஆண்டுகள் மூன்று முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது மூன்று முறையும் டெல்லி முதலமைச்சராக ஷீலா தீட்சித் இருந்தார்.

ஆம் ஆத்மி தீவிரம்: இதனைத் தொடர்ந்து கடந்த கடந்த 2015ஆம் ஆண்டு முதன் முறையாக ஆம் ஆத்மி டெல்லி தேர்தல் களத்தில் இறங்கியது. போட்டியிட்ட முதல் முறையே ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது முதல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2020ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. எனவே மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி தீவிரம் காட்டி வருகிறது.

Last Updated : 23 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.