ETV Bharat / bharat

பிரமபுத்திரா நதியின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டும் சீனா...இந்தியா என்ன செய்யப்போகிறது? - CHINA MEGA DAM ON BRAHMAPUTRA

திபெத்தில் பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா பெரிய அணை ஒன்றை கட்டத் திட்டமிட்டுள்ளது. அதனால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் தாக்கம் என்ன? இந்தியா என்ன செய்ய வேண்டும்?என்பதை அலசுகிறது இந்த கட்டுரை

பிரமபுத்திரா நதி
பிரமபுத்திரா நதி (Image credits-Etv Bharat)
author img

By Aroonim Bhuyan

Published : Jan 7, 2025, 6:54 PM IST

புதுடெல்லி: திபெத்தில் பிரமபுத்திரா நதியின் குறுக்கே சீனா பெரிய அணை ஒன்றை கட்டத் திட்டமிட்டுள்ளது. அதனால் இந்தியாவுக்கு ஏற்படப்போகும் தாக்கம் என்ன? இந்தியா என்ன செய்ய வேண்டும்? என்பதை அலசுகிறது இந்த கட்டுரை

திபெத்தில் யார்லுங் சாங்போ(இந்தியாவில் பிரமபுத்திரா என்று அழைக்கப்படுகிறது) நதியின் குறுக்கே பெரிய அணை கட்டுவதன் மூலம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. சீனா கட்டும் அணையானது நீரியல் அல்லது சுற்றுச்சூழல் அல்லது ஆற்றல் பாதுகாப்பின் அடிப்படையில் கட்டப்பட்டாலும் கூட இந்தியா, வங்கதேசம் ஆகிய பிரமபுத்திரா நதிகளின் கீழ் பகுதியில் உள்ள நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

உலகின் பெரிய நீர் மின் திட்டம்: இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாக சீனாவின் அரசு ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம்,"யார்லுங் சாங்போ நதியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்கு சீன அரசு அனுமதி அளித்துள்ளது,"என தெரிவித்துள்ளது. இந்த அணையானது உலகின் பெரிய நீர் மின்சார திட்டமாக இருக்கும் என்றும், ஆண்டுக்கு 300 கிலோவாட் மணி நேரம் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பெரிய நீர் மின் திட்டமாக கருதப்படும் யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மூன்று கோர்ஜஸ் அணைகள் மூலம் மின்சாரம் தயாரித்து வரும் சீனா, இப்போதைய புதிய திட்டத்தின் மூலம் அதைவிட மூன்று மடங்கு மின்சாரம் தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளது.

இந்த பெரிய அணை திட்டமானது சீனாவின் 2021-25ஆம் ஆண்டின் 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு திட்டமாகும். இதற்கு அண்மையில் சீனா அனுமதி அளித்துள்ளது. பிரமபுத்திரா நதியின் கடைகோடியில் இருக்கும் இந்தியா, வங்கதேச நாடுகளின் வல்லுநர்கள் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

தூய்மையான எரிசக்தி முன்னெடுப்பு: எனினும், அணை கட்டும் திட்டத்துக்கு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது. எல்லைகளை தாண்டி பாயும் நதிகளின் வளர்ச்சி குறித்து சீனா எப்போதுமே பொறுப்புடமையுடன் உள்ளது எனக் கூறியுள்ளது. இது குறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "யார்லுங் சாங்போ நதியின் கீழ் பகுதியில் சீனாவின் நீர் மின்சார வளர்ச்சி திட்டங்கள் என்பது தூய்மையான எரி சக்தி முன்னெடுக்கப்படுவதை விரைவுபடுத்துவதாகும். காலநிலை மாற்றம் மற்றும் தீவிர நீரியல் பேரழிவுகளுக்கு பதில் நடவடிக்கையாகவும் இருக்கும்.

நீர் மின்சார முன்னெடுப்பு என்பது கடந்த சில தசாப்தங்களாக ஆழமாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அணையின் கீழ் பகுதியில் உள்ள நாடுகளுக்கு எந்த வித பாதகமான விளைவுகளையும் இந்த திட்டம் ஏற்படுத்தாது. நதியின் கீழ் பகுதியில் உள்ள நாடுகளுடன் ஏற்கனவே உள்ள தகவல் தொடர்பு முறைகள் மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆற்றினால் பயனடையும் மக்களுக்கான நிவாரணம், பேரழிவை தடுத்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும்,"என்றார்.

பாதிப்பை அதிகரிக்கும்: எனினும், அருணாசல பிரதேசம், அசாம் மாநிலங்களின் உயிரோட்டமாக பிரமபுத்திரா நதி திகழ்கிறது. இந்த மாநிலங்களின் குடிநீர் தேவை, வேளாண் தேவை, நீர் மின்சாரம் ஆகியவற்றையும் பூர்த்தி செய்கிறது. திபெத் பகுதியில் அணை கட்டும் நிலையில் அதன் காரணமாக வறண்ட கோடைகாலங்களில் நதியின் நீரோட்டம் குறிப்பிடத்தக்க அளவு குறையும். இதனால், இந்த மாநிலங்களின் வேளாண்மை, குடிநீர் தேவை பாதிக்கப்படும். குறைந்த நீரோட்டமானது ஆற்றில் வண்டல் படிவதற்கு வழிவகுக்கும், வெள்ளப்பெருக்கு காரணமாக மண் வளம் மோசமாக பாதிக்கப்படும்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் குறிபபாக பருவமழை காலங்களில் அடிக்கடி வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகின்றன. கனமழை பெய்யும் காலங்களில் சீனா கட்ட உள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், நதியின் கீழ் பகுதியில் உள்ள பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்பை அதிகரிக்கும். மேலும் மனித உயிர்களுக்கும், வேளாண் பயிர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

இந்த பிராந்தியத்தில் பிரமபுத்திரா நதி விரிவான வேளாண் நடவடிக்கைகளை ஆதரிக்கிறது. ஆற்றின் நீரோட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் வேளாண் சுழற்சியை பாதிக்கும். இது லட்சகணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அணையின் காரணமாக வண்டல் மண் அடித்துச் செல்லப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றங்கள் மண்ணின் தரத்தை பாதிக்கலாம், விவசாய உற்பத்தியைக் குறைக்கலாம்.

எரிசக்தி இலக்குகள் பாதிப்பு: அழியும் நிலையில் உள்ள கங்கை டால்பின், பல்வேறு புலம் பெயர் பறவைகள் உள்ளிட்ட தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும், பல்வேறு உயிரினங்களுக்கும் தாயகமாக பிரம்மபுத்திரா வடிநிலப்பகுதி உள்ளது.நீரோட்டத்தில் நேரிடும் மாற்றம் என்பது இதன் வாழ்விடங்களை பாதிப்பதாக இருக்கும். பல்லுயிர் பெருக்கம் குறையத் தொடங்கும். நதியின் இயற்கையான நீரோட்டத்தைச் சார்ந்திருக்கும் மீன்களின் எண்ணிக்கை என்பது தீவிரமாக அபாயத்துக்கு உள்ளாகும். இது சூழல் ரீதியிலும், உள்ளூர் மீனவர் சமூகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அருணாசல பிரதேசம் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் நீர்மின்சார மேம்பாட்டிற்கான லட்சியத் திட்டங்களைக் கொண்டுள்ளது. நதியின் மேற்பகுதியில் சீனா அணை கட்டுவதன் காரணமாக நீர் வரத்து குறைவதால், இந்தத் திட்டங்கள் பாதிக்கப்படக் கூடும். இந்தியாவின் எரிசக்தி இலக்குகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

நதிநீரை பகிர்ந்து கொள்வதில் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றுடன் இந்தியா சில பிரச்னைகளை சந்திக்கிறது. எனினும் இந்த இரண்டு நாடுகளுடனும் முறையான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன. பாகிஸ்தானுடன் இந்தியா இந்தூஸ் தண்ணீர் ஒப்பந்தம் என்றும், வங்க தேசத்துடன் கங்கை தண்ணீர் பகிர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், சீனாவுடன் இந்தியா இது போன்ற ஒப்பந்தம் எதனையும் மேற்கொள்ளவில்லை. பிரமபுத்திரா நதியைப் பொறுத்தவரை சீனாவின் தரப்பில் இருந்து நீரியல் தரவுகளை வழங்க வேண்டும் என்று சீனாவிடம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக ஒப்பந்தம் மட்டுமே என்றும், இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். சீனா எப்போது வேண்டுமானாலும் அதை செல்லாது என்று அறிவிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய எல்லை தாண்டிய நீர் பிரச்சினைகளில் முன்னணி கருத்தாளரும், பாதுகாப்புத்துறை ஆய்வுக்கான மனோகர் பாரிக்கர் மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் உத்தம் குமார் சின்ஹா,"சீனாவின் நடவடிக்கையை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். சீனா பிரமபுத்திரா நதியின் தொடக்கத்தில் உள்ள நாடு. சீனாவில் தோன்றும் 11 நதிகளை அண்டை நாடுகளுடன் அது பகிர்ந்து கொள்கிறது. இந்த அனைத்து நதிகளிலும் சீனா, நதிகளின் ஆரம்ப இடத்தில் உள்ளது. சீனா, நதிகளை அரசியல் மற்றும் ராஜதந்திர நோக்கங்களுக்காகவும் அந்நியச் சக்தியாகவும் பயன்படுத்தும், அவர்கள் நதிகளை வற்புறுத்தல் மற்றும் ஒப்புதலின் கலவையாகப் பயன்படுத்துகிறார்கள்.

சீனாவின் அண்மை நடவடிக்கையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இந்தியா எந்த அச்சமும் கொள்ளக் கூடாது. அதற்கு பதிலாக முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரமபுத்திரா நதியைப் பொறுத்தவரை நம் நாட்டில் ஒடும் பகுதியில் நமது வலிமையையும், திறனையும் நாம் அதிகரிக்க வேண்டும். நாம் மிகவும் அதி நவீன கண்காணிப்பு, சரிபார்ப்பு திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். நீரியல் தரவுகளுக்கு சீனாவை சார்ந்து நாம் இருக்கக் கூடாது. அருணாசல பிரதேசத்தில் பிரமபுத்திரா நதி நீரை சேமிக்கும் திறனை விரிவாக்க வேண்டும். உள்ளூர் கவலைகள், மக்களின் இடப்பெயர்வு மற்றும் நில அதிர்வு நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இதில் இந்தியா மிகவும் கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருதரப்பு ஒத்துழைப்பு: அணைக்கட்டுகள் குறித்து இந்தியா தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனா அவர்கள் பகுதியில் இருந்து தண்ணீரை விடுவிக்கும்போது, வெள்ள நீரை நீர் பல்வகைப்படுத்தல் மற்றும் தணிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வெள்ளத்தை முன்கூட்டியே அறிதல், வெள்ள அபாயத்தை அறிவதற்கு சேட்டிலைட்களை இந்தியா நாட வேண்டும்.

நமது பகுதியில் டெலிமெட்ரி நிலையங்களை வலுப்படுத்த வேண்டும். இவற்றில் பெரும்பாலானவை இயங்கும் நிலையில் இல்லை. தூதரக ரீதியாக சீனாவுடன் எல்லைப் பிரச்னைகள் மட்டுமின்றி பிரமபுத்திரா நதி, சட்லட்ஜ் நதி குறித்தும் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். தொடர்ந்து முறையாக இந்த விஷயங்களில் பதில் நடவடிக்கைகளையும், பேச்சுவார்த்தையின் செயல்முறைகளையும் சீனாவிடம் கேட்டறிய வேண்டும்.

பிரமபுத்திரா நதி விஷயத்தில் வங்கதேசத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பை இந்தியா மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கங்கா-மேகனா-பிரம்மபுத்ரா படுகை பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். அதில் வங்கதேசம், பூட்டான், நேபாளம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய தெற்கு ஆசிய நாடுகளுடன் மீகாங்-கங்கா ஒத்துழைப்பு (MGC) முறையை இந்தியா ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது. நீர் ஆதாரங்களின் கடைசி பகுதியில் இருக்கும் நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா வரயறுக்கப்பட்ட பங்கை வகிக்க வேண்டும்,"என்று கூறினார்.

ஆணையம் தேவை: இது குறித்து பேசிய தாகாவில் உள்ள தன்னார்வ நிறுவனமான நதிக்கரை மக்கள் என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் ஷேக் ரோகோன், சின்ஹாவின் கருத்துடன் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருக்கிறார். மேலும் இது குறித்து பேசிய ஷேக் ரோகோன்,"வங்கதேசம், இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஆற்று வடி நிலப்பகுதி ரீதியிலான ஆணையம் அல்லது ஒரு இணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு மீகாங் நதி ஆணையம் ஒரு சிறந்த உதாரணமாகும். கீழ்பகுதி மீகாங் நதி படுகைக்கான பிராந்திய பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு அடிப்படையிலான அரசுகளுக்கு இடையேயான மீகாங் நதி ஆணையம் 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிராந்தியத்தின் நீடித்த வளர்ச்சி, நீர் வளங்களின் அறிவுசார் மையம், தண்ணீர் ராஜதந்திரத்துக்கான தளம் ஆகியவற்றுக்கான அமைப்பாக இது செயலாற்றுகிறது.

1992 தண்ணீர் மாநாடு, ஐநா நீர்வழிகள் மாநாடு ஆகியவை நடைபெற்றுள்ளன. தண்ணீர் வளம், ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் ஆகியவற்றை பகிர்வதில் ஒத்துழைப்புக்கான சட்டரீதியான கட்டமைப்பை 1992ஆம் ஆண்டின் மாநாடு வழங்குகிறது. 1997ஆம் ஆண்டு மாநாடானது உள்நாட்டு நீர் வழிகளை பாதுகாப்பது, நிர்வகிப்பது, நிலையாக உபயோகிப்பது ஆகியவற்றை உருவாக்கி உள்ளது. இந்தியா, சீனா இருநாடுகளும் இரண்டு மாநாடுகளிலும் அங்கீகரிக்கப்படவில்லை. வங்கதேசம் 1997ஆம்ஆண்டு மாநாட்டில் கையெழுத்திட்டது. ஆனால் அது இன்னும் நமது நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. இரண்டு மாநாடுகளில் 1997ஆம் ஆண்டு மாநாடு மிகவும் வசதியானது.

லடாக் எல்லை சிக்கல் குறித்த விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே இருதரப்பு ஒத்துழைப்பு அண்மை காலங்களில் நட்பு ரீதியிலான ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இப்போது தீபெத்தில் பெரிய அணையை கட்டுவது என்ற சீனாவின் தீர்மானம் இரண்டு ஆசிய ஜாம்பவான்களுக்கு இடையிலான உறவின் எதிர்காலம் எங்கு செல்கிறது என்பது குறித்த புதிய யூகங்களை எழுப்பி உள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.