ETV Bharat / state

"ஆசிரியர்கள் பணி நிரந்தர விவகாரம்: ஆளுநர் உரையில் ஏமாற்றம்" - பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி! - G K MANI

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் தருகிறது என பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி
பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 22 hours ago

சென்னை: நிதிநிலை அறிக்கைக்கு முன்னோட்டமாக ஆளுநர் உரை அமைய வேண்டும் எனவும் பேரவை தலைவர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “தனி மனிதனுக்கும், சமுதாயத்துக்கும் அடிப்படை வாழ்வுரிமை என்பது சமூக நீதி. அதன் அங்கம் இட ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க வேண்டும். சமூக நீதி அக்கறை இருக்கிறது என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.

ஆளுநர் உரையில் ஏமாற்றம்:

நிதிநிலை அறிக்கைக்கு முன்னோட்டமாக ஆளுநர் உரை அமைய வேண்டும். ஆனால், பாசனம் திட்டங்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி திட்டங்கள், கல்வி திட்டங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டங்கள் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெற வில்லை.

இதையும் படிங்க: "கடமை தவறிய எடப்பாடி பழனிசாமி" - செல்வப்பெருந்தகை பகிரங்க குற்றச்சாட்டு!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையான, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கேட்டு வருகின்றனர். அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாமல் ஏமாற்றம் தருவதாக ஆளுநர் உரை உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பாமக சார்பில் அறவழியில் மகளிர் அணி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு, மகளிரை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைப்பது கொடுமையானது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சியில் 28 மாவட்டங்களில் உள்ள தலைவர்கள், உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 5 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. எனவே, அந்த இடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த வேண்டும். பேரவை தலைவர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். சட்டமன்ற பேரவை நேரலை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.