தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களவை சபாநாயகர் யார்? யாருக்கு வாய்ப்பு? துணை சபாநாயகர் தேர்வில் மரபை காக்குமா பாஜக? - Lok Sabha Session

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லாவை தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை பிரதமர் மோடி மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

Etv Bharat
Prime Minister Narendra Modi and LS Speaker candidate Om Birla (Photo/ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 9:55 AM IST

டெல்லி:18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த 24ஆம் தேதி கூடியது. தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், இன்று (ஜூன்.26) மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லா மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் 8 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வான கேரள காங்கிரஸ் எம்பி கே.சுரேஷ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், இவ்விரண்டு பேருக்கு இடையே இன்று தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை பிரதமர் மோடி தாக்கல் செய்வார்.

தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த தீர்மானத்தை வழிமொழிவார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் லல்லான் சிங்ம் ஜித்தன் ராம் மஞ்சி, அமித் ஷா, சிராக் பஸ்வான், எச்டி குமாரசாமி, ராம் மோகன் நாயுடு ஆகியோர் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை ஆதரித்து வழிமொழிவர்.

மறுபுறம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளா காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷை மக்களவை சபாநாயகராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் தாக்கல் செய்யப்படும். அந்த தீர்மானத்தை சிவ சேனா உத்தவ் தாக்ரே அணியின் எம்பி அரவிந்த் கன்பத் சாவந்த், சமாஜ்வாதி கட்சி எம்பி ஆனந்த் பதூரியா, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் வழிமொழிய உள்ளனர்.

அதன் பின் இருவருக்கும் இடையே தேர்தல் நடத்தப்பட்டு மக்களவை சபநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார். முன்னதாக கடந்த இரண்டு நாட்களில் பதவியேற்காத எம்பிக்கள் இன்றும் பதவியேற்றுக் கொள்ள உள்ளனர். கடைசியாக, புதிதாக அமைந்த அமைச்சரவையில் இடம் பெற்று உள்ள அமைச்சர்களை மக்களவை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்துவார்.

இதனிடையே மக்களவை துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும். நாடாளுமன்ற மரபுபடி துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு வழங்க வேண்டு. ஆனால் கடந்த பாஜக ஆட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களே துணை சபாநாயகரா தேர்வு செய்யப்பட்டனர். மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ள நிலையில், மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுவதற்கு அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படிங்க:ஆம்னி பேருந்துகள் விவகாரம்; பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவும் - உச்சநீதிமன்றம் உத்தரவு - Omni Buses Allows into TN

ABOUT THE AUTHOR

...view details