ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் ஞாயிறு வேட்டை.. 31 நக்சல்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்! - CHHATTISGARH NAXALITES ENCOUNTER

சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினர் இருவர் வீரமரணம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதிநிதித்துவ பட்ம்
பிரதிநிதித்துவ பட்ம் (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2025, 10:30 PM IST

பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினர் இருவர் வீரமரணம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட இந்திராவதி தேசிய பூங்கா பகுதிக்கு அருகே அமைந்துள்ள காட்டில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பாதுகாப்புப் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

பல மணிநேரம் நீடித்த இந்தச் சண்டையில், நக்சலைட்டுகள் 31 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினர் இருவர் வீர மரணம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவலாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சண்டை நடைபெற்ற பகுதியில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

அத்துடன், காயமடைந்த இரண்டு பாதுகாப்புப் படையினர் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "பதவியை ராஜினாமா செய்கிறேன்" ஆளுநரிடம் சொன்ன பாஜக முதல்வர்.. மணிப்பூர் அரசியலில் பற்றிய பரபரப்பு!

பிஜாப்பூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய் பஸ்தர் பகுதியில் 65 நக்சல்கள் உட்பட இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 81 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் மொத்தம் 219 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2026 மார்ச் 31-க்குள்,சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கெடுவிதித்துள்ள நிலையில், மாநிலத்தில் நக்சல் மீதான தேடுதல் வேட்டை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.