ETV Bharat / entertainment

வார இறுதி கடந்தும் கரை ஏறாத ’விடாமுயற்சி’... முதல் 4 நாட்களின் வசூல் நிலவரம் என்ன? - VIDAAMUYARCHI WEEKEND COLLECTION

Vidaamuyarchi Weekend Box Office Collection: அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் ’விடாமுயற்சி’ திரைப்படம் வார இறுதியைக் கடந்தும் இந்திய அளவில் 61 கோடி வரை வசூல் செய்துள்ளது.

விடாமுயற்சி பட போஸ்டர்
விடாமுயற்சி பட போஸ்டர் (Credits: Lyca Productions X Accounts)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 10, 2025, 11:19 AM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியிருந்த 'விடாமுயற்சி' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (பிப்.06) திரையரங்குகளில் வெளியானது. முதல் முறையாக இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்த அஜித்குமார், ’மங்கத்தா’ திரைப்படத்திற்கு பின் அஜித்துடன் மீண்டும் இணையும் அர்ஜுன் என இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித்குமார் நடிப்பில் எந்த படமும் ரிலீஸாகததால் இன்னும் எதிர்பார்ர்பு கூடியது. இதனால் படம் வெளியான முதல் நாள் அஜித் ரசிகர்களால் திருவிழா போல கொண்டாடப்பட்டது. த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இவ்வளவு எதிர்பார்ப்புகளையும் ’விடாமுயற்சி’ திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதை முதல் நாள் வசூலில் இருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது. ஏனெனில் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான அளவே ’விடாமுயற்சி’ திரைப்படம் வசூல் செய்தது, சாக்னில்க் (Sacnilk) இணையதளத்தின்படி, விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் இந்தியா முழுமைக்கும் 26 கோடி வரை வசூல் செய்துள்ளது.

வார இறுதி நாட்களில் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வார இறுதி முடிந்தும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஒட்டுமொத்தமாக 100 கோடி ரூபாய் வசூல் செய்யவே திணறி வருகிறது ’விடாமுயற்சி’. சாக்னில்க் இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, முதல் நான்கு நாட்கள் முடிவில் விடாமுயற்சி இந்தியாவில் மொத்தமாக சுமார் 61.72 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

வார இறுதி நாட்களான சனிக்கிழமை அன்று 13.5 கோடி ரூபாயும் ஞாயிற்றுக்கிழமை 11.92 கோடி ரூபாயும் விடாமுயற்சி திரைப்படம் வசூல் செய்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் சுமார் 95 கோடியில் இருந்து 100 கோடி வரை வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.

படத்தின் மீது இருந்த பெரும் எதிர்பார்ப்பால், வெளியான ஒரு சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் எனும் வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் வார இறுதியை கடந்த பிறகும் எதிர்பார்த்தபடி படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இது மட்டுமில்லாமல் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் மட்டும், 9 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதனால், விடாமுயற்சிக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறையக் கூடும். அது வசூலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘விடாமுயற்சி’ படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களே வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியாக கூறப்படுகிறது. வழக்கமான அஜித் படங்களில் இருக்கும் எந்த கமர்ஷியல் அம்சமும் இல்லை. படம் மிக மெதுவாக நகர்கிறது போன்ற எதிர்மறையான விமர்சனங்களும் ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் படம், அதகளமான சண்டை காட்சிகள், அஜித், த்ரிஷாவின் அருமையான நடிப்பு என பாசிட்டிவான விமர்சனங்களுமாக மாறி மாறி சொல்லப்பட்டு வந்தன.

இதையும் படிங்க: நடிகர் கார்த்தியின் கேங்க்ஸ்டர் படத்தில் இணையும் வடிவேலு...?

ஆனாலும் திரையரங்குகளுக்குச் சென்று மக்கள் பார்க்கவில்லை. இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ’விடாமுயற்சி’ திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் திரைப்படமான பிரேக்டவுன் தழுவல் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.