டெல்லி :சமண சமய ஞானி ஆச்சார்யா வித்யாசாகர் மகாராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்கள் மத்தியில் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த ஆச்சார்யா ஆற்றிய மதிப்புமிக்க முயற்சிகள் என்றும் நினைவு கூறப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். அவர் வாழ்நாள் முழுவதும் வறுமை ஒழிப்பு, சமூகத்தில் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார் என்று பிரதமர் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் உள்ள சந்திரகிரி ஜெயின் கோவிலில் ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜை சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ள பிரதமர், அந்தச் சந்திப்பு தமக்கு மறக்க முடியாததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகாராஜ் அவர்களின் மறைவு நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.