சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட். தமிழில் சந்திரமுகிஒ, ஒஸ்தி, தேவி ஹிந்தியில் ஜோதா அக்பர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அருந்ததி திரைப்படத்தில் இவரது பீதி கிளப்பும் வில்லத்தனத்தை எளிதில் மறக்க முடியாது.
இப்படி பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் கொரோனா தொற்று லாக்டௌன் காலத்தில் அவர் மேற்கொண்ட மனிதாபிமான உதவிகள் மூலம் சோனு சூட் நாடு முழுவதும் பிரபலமானார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயண வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் அவரை அவர் பிறந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தின் ஐகானாக அவர் போற்றப்பட்டார்.
இந்நிலையில் 10 இலட்ச ரூபாய் மோசடி வழக்கில் சோனு சூட்டை கைது செய்ய, பஞ்சாப்பின் லூதியான நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. லூதியானா நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராமன்பிரீத் கவுர் இந்த வாரண்டை பிறப்பித்துள்ளார். லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா, மோஹித் சுக்லா என்பவருக்கு எதிராக 10 லட்சம் ரூபாய் மோசடி வழக்கைத் தொடர்ந்தார்.
அதில், மோஹித் சுகலா தொடர்புடைய ரிஜிகா நாணய நிறுவனத்தில் (Rijika coin company) முதலீடு செய்ய தூண்டியது நடிகர் சோனு சூட் தான் என அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக பல முறை சம்மன் அளிக்கப்பட்டும் சோனு சூட் ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு எதிராக நீதிமன்றம் இந்த கைது வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளது.
லூதியானா நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் உத்தரவில், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஓஷிவாரா காவல் நிலைய அதிகாரிக்கு சோனு சூட்டை கைது செய்ய உத்தரவிட்டது. அதில், ”சோனு சூட்டிற்கு முறையாக சம்மன்(கள்) அல்லது வாரண்ட்(கள்) அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஆஜராகத் தவறிவிட்டார். எனவே சோனு சூட்டைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்ய உத்தரவிடப்படுகிறது.
இந்த வாரண்ட் தொடர்பாக 10-02-2025 அன்று அல்லது அதற்கு முன்னர், கைது செய்யப்படும் விதம் அல்லது கைது செய்யப்படாத காரணத்தை சான்றளிக்கும் ஒப்புதலுடன் திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள் " என குறிப்பிட்ட காவல்நிலையத்திற்கு வாரண்ட் மூகம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணை பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
We need to clarify that the news circulating on social media platforms is highly sensationalised. To put matters straight, we were summoned as a witness by the Honourable Court in a matter pertaining to a third party to which we have no association or affiliation. Our lawyers…
— sonu sood (@SonuSood) February 7, 2025
இந்த செய்தி வெளியானதிற்கு மறுப்பு தெரிவித்து சோனு சூட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”தனக்கும் அந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. சாட்சியாகவே எனக்கு நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அளிக்கப்பட்டது, 10ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் எனது வழக்கறிஞர்கள் இதை எதிர்கொள்வார்கள்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித்தின் முந்தைய படங்களின் வசூலை கூட நெருங்காத ’விடாமுயற்சி’...முதல் நாள் வசூல் நிலவரம்
ரிஜிகா நாணய நிறுவனம் மீது இது போன்று பல மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தூதராக இருந்தததால்தான் சோனு சூட் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது வரை சென்றுள்ளது. வழக்கை நடத்தி வரும் வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா கூறியதாவது: "2021 ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு ஐடிகள் மூலம் நிறுவனத்தில் முதலீடு செய்தனார். ஆனால் கூறப்பட்ட படி மூன்று ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாகவோ அல்லது மும்மடங்காகவோ அதிகரிக்கவில்லை. மேலும் பணத்தை ஒப்படைப்பதையும் தவிர்ந்த்து வருகிறது.
சோனு சூட் நடித்து அவரே இயக்கி நடித்த Fateh எனும் ஹிந்தி படம் சமீபத்தில்தான் வெளியாகியது. இப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் சென்று சேரவில்லை. பல வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா திரைப்படத்திலும் சோனு சூட் நடித்திருந்தார்,