ETV Bharat / bharat

மாசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: "தமிழக ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவதாக தெரிகிறது" -உச்ச நீதிமன்றம் காட்டம்! - TN GOVT GUV CASE

மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தமிழக ஆளுநர் எவ்வளவு காலம் எடுத்து கொள்வார் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவதாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2025, 9:55 PM IST

புதுடெல்லி: தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்துவரும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

நீதிபதிகள் பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலோ, அவற்றை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்யும் வகையில் திருப்பி அனுப்பாமலோ அப்படி தன்வசம் வைத்திருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இது அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவை மீறும் செயலாகும்" என்று நீதிபதி பர்திவாலா காட்டமாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட ஆளுநர் தரப்பு வழக்குரைஞரும், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞருமான ஆர். வெங்கடரமணி, "தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இரண்டு மனுக்களில், ஒரு மனு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன திருத்த மசோதா தொடர்பானது.

மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அவற்றின் வேந்தரான ஆளுநருக்கு தான் உண்டு. அத்துடன் யுஜிசி விதிமுறைகளின்படி, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவில் யுஜிசி தலைவரின் பிரதிநிதியும் இடம்பெற வேண்டும். மேலும் இந்த தேடல் மற்றும் தேர்வுக் குழுவை நியமிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு தான் உண்டு" என்று குறிப்பிட்டார்.

மேலும்," இது புதிதாக இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை பற்றிய விவகாரம் அல்ல; ஏற்கெனவே உள்ள சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை பற்றியது." என்று அவர் குறிப்பிட்டார்.

அதாவது, மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் யுஜிசியின் இந்த விதிமுறைக்கு எதிராக உள்ளது." என்று பொருள்படும்படி ஆளுநர் தரப்பு வழக்குரைஞர் வாதத்தை முன்வைத்தார்.

இதையும் படிங்க:மசோதாக்கள் நிலுவை விவகாரம்: "ஆளுநரின் நடவடிக்கையால் தமிழக மக்கள், மாநில அரசுக்கு பாதிப்பு" - உச்ச நீதிமன்றம் வேதனை!

அவரது வாதத்தை கேட்ட நீதிபதி பர்திவாலா, "அப்டியானால் குறிப்பிட்ட சட்டத்திருத்தம் தொடர்பாக ஆளுநருக்கு இருக்கும் ஆட்சேபங்கள் என்ன? அதில் உள்ள ஓட்டைகள் என்ன? என்பவை குறித்து ஆளுநர், மாநில அரசுக்கு முறையாக தெரிவித்துள்ளாரா? அதற்கான பதிவேடுகள், ஆவணங்கள் ஏதேனும் ஆளுநர் மாளிகை வசம் உள்ளதா? என்று மீண்டு்ம் கேள்வி எழுப்பினார்.

மேலும்,"எதனடிப்படையில் மாநில அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்? என்பதை இந்த நீதிமன்றம் அறிய விரும்புவதாக கூறிய நீதிபதி, ஆளுநர் இந்த விஷயத்தில் ஏன் இவ்வாறு செயல்படுகிறார் என்பதை சட்ட வல்லுநர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்." என்றும் தெரிவித்தார்.

அதற்கு, இங்கு பிரச்சனை அடிப்படையில், அரசியலமைப்பு சட்டத்தின் 200 ஆவது பிரிவை ஆளுநர் மீறும் வகையில் செயல்படவில்லை என்பது பற்றியது அல்ல. ஆனால், மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மாநில அரசு விரும்புவதாக தெரிகிறது. ஆனால், அவ்வாறு செய்ய இயலுமா? என்று ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு," மாநில சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்குபின் மீண்டும் தன் பார்வைக்கு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் எவ்வளவு காலம் கடத்துவார்? என்று நீதிபதி பர்திவாலா கேள்வி எழுப்பினார்.

மே்லும், ஒரு மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பும்போதும், அதனை மறுபரிசீலனை செய்து அவையால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு சமர்ப்பிக்கப்படும்போது, ​​ஆளுநருக்கு அதைத் தடுத்து நிறுத்த அதிகாரம் உள்ளதா?

மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை, குடியரசுத் தலைவரின் பார்வைக்கு ஆளுநர் எதனடிப்படையில் அனுப்பினார்?

குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பார்வை அனுப்பும் விருப்புரிமை ஆளுநருக்கு உள்ளதா அல்லது குறிப்பிட்ட விஷயங்களையும் தாண்டியும் இவ்வாறு ஆளுநர் இவ்வாறு செயல்பட முடியுமா?

மாநில அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது குறித்த 200 ஆவது சட்டப்பிரிவு எவ்வாறு பொருள் கொள்ளப்பட வேண்டும்? என்று அடுக்கடுக்காக கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு (பிப்.7) ஒத்திவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.