தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு; என்ஐஏ வெளியிட்ட 2 சிசிடிவி காட்சிகள்!

Rameshwaram Cafe bomb blast: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவுக் கடையில் வெடிகுண்டு வைத்த நபர் பேருந்தில் பயணித்த சிசிடிவி காட்சிகளை என்ஐஏ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Rmeshwaram Cafe bomb blast
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு

By PTI

Published : Mar 8, 2024, 11:03 PM IST

பெங்களூரு: பெங்களூருவில் செயல்பட்டு வந்த ராமேஸ்வரம் கஃபே உணவுக் கடையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி மர்மமான முறையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாவட்ட மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தா குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து என்ஐஏ, எஃப்எஸ்எல் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படை ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், என்ஐஏ விசாரணை நடத்தியதில், இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பல்லாரி மாவட்டத்தில் உள்ள கவுல் பஜாரைச் சேர்ந்த துணி வியாபாரி மற்றும் ஒரு பி.எஃப்.ஐ. ஆவார்.

இந்த பி.எஃப்.ஐ நபர்தான் இந்த குண்டு வெடிப்பிற்கு மூலக்காரணமாக இருந்ததாகவும், இவருக்கு சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தததாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், என்ஐஏ தனது எக்ஸ் பக்கத்தில் ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு குண்டு வைக்க வந்த நபர், பேருந்தில் பயணித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது.

மாநகரப் பேருந்து மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், வெடிகுண்டு வைத்த நபர் தனது அடையாளத்தை மறைக்கவும், புலனாய்வாளர்களை தவறாக வழிநடத்த அடிக்கடி தனது ஆடைகளை மாற்றி வெளியே வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

மேலும், வெடிகுண்டு வைத்த நபர் பெங்களூரில் இருந்து துமகுரு, பல்லாரி, பிதார் மற்றும் பின்னர் பட்கல் ஆகிய இடங்களுக்குச் சென்றதை விசாரணைக் குழுக்கள் கண்டுபிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க:மகா சிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 18 குழந்தைகள் படுகாயம்.. ராஜஸ்தானில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details