சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7980 ஆக இருக்கிறது.
டிரம்பின் வர்த்தகப் போர்: பிப்ரவரி 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.62,320 ஆக இருந்தது. பிப்ரவரி மாதம் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திடீரென நேற்று தங்கத்தின் விலை திடீரென குறைந்தது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. மெக்சிகோ, கனடா, சீனா உள்ளிட்ட உலகநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% அளவுக்கு வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். உலகநாடுகளுடனான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் வர்த்தக போராகவே கருதப்படுகிறது.
மேலும் உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக சீனாவின் மத்திய வங்கி தொடர்ந்து மாதம் தோறும் வாங்கி வரும் தங்கத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றாவது மாதமாக ஜனவரியிலும் அதிக அளவு தங்கத்தை சீனா வாங்கியுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் ஐபிஎஸ் பணியிடைநீக்கம்!
தங்கம் வாங்கும் மத்திய வங்கிகள்: இந்தியாவில் ரிசர்வ் வங்கி 72.6 டன் தங்கத்தை வாங்கி உள்ளது. உலக தங்க கவுன்சிலின் அறிக்கையின்படி உலகில் உள்ள முக்கியமான மத்திய வங்கிகள் 2024ஆம் ஆண்டில் 1000 டன் அளவுக்கு தங்கத்தை கொள்முதல் செய்துள்ளன. இதே நிலை இந்த ஆண்டும் தொடர்கிறது. எனவே உலக அளவில் பணவீக்கம் காரணமாக பங்கு சந்தைகள் வலு இழந்துள்ளன. எனவே உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தை நோக்கி திரும்புகிறது. எனவேதான் தங்கம் ஒரு நாள் குறைந்த போதிலும் அடுத்து சில நாட்களுக்கு உயர்ந்தபடியே இருக்கிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7980 ஆக உள்ளது. சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 63840 ஆக உள்ளது. அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் எந்த வித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.107 ஆக தொடர்கிறது.