வாஷிங்டன்: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக (பிப்.13) அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை சந்தித்து உரையாடவுள்ளார். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியும், டிரம்ப்பும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். இந்நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட்டை (43) பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட், அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குநராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில், ''இன்று வாஷிங்டனில் அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை அமைப்பின் இயக்குநர் துளசி கப்பார்ட்டுடன் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தினேன். பயங்கரவாத எதிர்ப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களில் சைபர் அச்சுறுத்தல்களில் உளவுத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதம் நடத்தப்பட்டது'' என குறிப்பிட்டுள்ளார்.
Met USA’s Director of National Intelligence, @TulsiGabbard in Washington DC. Congratulated her on her confirmation. Discussed various aspects of the India-USA friendship, of which she’s always been a strong votary. pic.twitter.com/w2bhsh8CKF
— Narendra Modi (@narendramodi) February 13, 2025
துளசி கப்பார்ட் உளவுத்துறை அமைப்புகளை வழிநடத்தவும், அதிபர் டிரம்பிற்கு தினசரி உளவுத்துறை தகவல்களை தயாரிக்கவும் தகுதி பெற்றவரா? என்பது குறித்து இரண்டு மாதங்களாக விவாதம் நடந்தது. அதன் பின்னரே செனட் உறுப்பினர்கள் அவரை உறுதி செய்தனர். அதன்படி தேசிய உளவுத்துறை அமைப்பின் இயக்குநராக துளசி கப்பார்ட் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அதிபர் டிரம்ப் தலைமையில் நடந்த பதவியேற்பு விழாவில் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் கோண்டி பதவி பிராமணம் செய்து வைத்தார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் பிரதமர் மோடி... அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் இன்று ஆலோசனை!
முன்னதாக பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். பின்னர் அங்கிருந்து இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார்.
இது குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தள பக்கத்தில், '' வாஷிங்டன் டிசியில் தரையிறங்கினேன். குளிருக்கு மத்தியில் அன்பான வரவேற்பு வழங்கியுள்ளனர். வாஷிங்டன் டிசி-யில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் என்னை மிகவும் சிறப்பாக வரவேற்றுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி. அதிபர் டொனால்டு டிரம்பின் சந்திப்பையும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையை உருவாக்க எதிர்நோக்குகிறேன். நமது மக்கள் நலனுக்காகவும், சிறந்த எதிர்காலத்திற்காகவும் நமது நாடுகள் இணைந்து உழைக்கும்'' என பதிவிட்டுள்ளார்.