அகமதாபாத்:மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து ரூ.1,814 கோடி மதிப்பிலான எம்டி (மெத்தில் என்டியாக்ஸி மெத்தபெட்டமைன்) போதைப்பொருள்கள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக குஜராத் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இன்று தெரிவித்துள்ளார்.
குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் டெல்லி போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) ஆகியவை இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், இந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஜம்மு - காஷ்மீர் தேர்தல்..நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை!
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "போதைப்பொருள்களுக்கு எதிரான போராட்டத்தில் மகத்தான வெற்றியைப் பெற்ற குஜராத் ஏடிஎஸ் மற்றும் டெல்லி என்சிபி-க்கு பாராட்டுகள்! சமீபத்தில், போபாலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சோதனை நடத்தி மற்றும் எம்டி தயாரிக்கப் பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1814 கோடி.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதில் நமது சட்ட அமலாக்க முகமைகளின் அயராத முயற்சிகளை இந்த சாதனை வெளிப்படுத்துகிறது. இந்தியாவை பாதுகாப்பான, ஆரோக்கியமான நாடாக மாற்றுவதற்கான அவர்களின் பணிக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்!" என குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்