ETV Bharat / bharat

கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் யார்?-டெல்லி தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! - DELHI ELECTION 2025

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த பர்வேஸ்வர்மா, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

முன்னாள் எம்.பி.க்கள் பர்வேஷ் வர்மா (இடது) மற்றும் ரமேஷ் பிதுரி
முன்னாள் எம்.பி.க்கள் பர்வேஷ் வர்மா (இடது) மற்றும் ரமேஷ் பிதுரி (Image credits-ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 3:42 PM IST

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 29 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முன்னாள் எம்பி பர்வேஸ்வர்மா புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து களம் இறக்கப்பட்டுள்ளார்.

கல்கஞ்ச் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி ரமேஷ் பிதுரி, முதலமைச்சரும் ஆம் ஆத்மி வேட்பாளருமான அதிஷியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். மேலும் பாஜக தேசிய நிர்வாகிகளான துஷ்யந்த் குமார் கவுதம், அஸ்கிஸ் சூட் ஆகியோர் முறையே கரோல் பாக், ஜானக் புரி தொகுதியில் இருந்து போட்டியிடுகின்றனர். காந்தி நகர் தொகுதியில் அர்விந்தர் சிங் லவ்லி, பிஜ்வாசான் தொகுதியில் முன்னாள் ஆம்ஆத்மி தலைவர் கைலாஷ் கெஹ்லோட்டும் போட்டியிடுகின்றனர்.

டெல்லி பாஜக முன்னாள் தலைவர் சதிஷ் உபாத்யாய் மால்வியா நகர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். ஆதர்ஷ் நகரில் போட்டியிடும் ராஜ்குமார் பாட்டியா, பட்லி தொகுதியில் இருந்து போட்டியிடும் தீபக் சவுத்ரி, ரித்தாலா தொகுதியில் இருந்து போட்டியிடும் குல்வாந்த் ராணா ஆகியோரது பெயர்களும் பாஜக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இவர்களைத் தவிர, நான்கோலை தொகுதியில் மனோஜ் சவுகான், மங்கள்புரி தொகுதியில் ராஜ்குமார் சவுகான், ரோஹினி தொகுதியில் விஜேயேந்திர குப்தா, சஹாலிமார் பக் தொகுதியில் இருந்து ரேகா குப்தா, மாடல் டவுண் தொகுதியில் இருந்து அசோக் கோயல், பட்டேல் நகர் தொகுதியில் இருந்து ராஜேந்திர குமார் ஆனந்த், ரஜோவ்ரி கார்டன் தொகுதியில் மஜின்தர் சிங் சிர்ஷா, ஜங்புரா தொகுதியில் இருந்து சர்தார் தன்வீர் சிங், ஆர்கே புரம் தொகுதியில் அணில் சர்மா, மெஹ்ரவ்லி தொகுதியில் இருந்து கஜேந்திர யாதவ், சாட்டாபூர் தொகுதியில் இருந்து கார்தார் சிங் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

அம்பேத்கர் நகர் தொகுதியில் இருந்து குஷி ராம் சுனார், பாதர்பூர் தொகுதியில் இருந்து நாராயண் தத் சர்மா, பாத்பார்கஞ்ச் தொகுதியில் இருந்து ரவீந்திர சிங் நேகி, விஸ்வாஸ் நகர் தொகுதியில் ஓம்பிரகாஷ் சர்மா, கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து அணில் கோயல், சீமாபுரி தொகுதியில் இருந்து குமாரி ரிங்கு,ரோஹ்தாஸ் நகர் தொகுதியில் இருந்து ஜிதேந்தர் மகாஜன், கோஹானா தொகுதியில் இருந்து அஜய் மாகாவார் ஆகியோரும் பாஜக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. எனவே இப்போதைய நிலவரப்படி அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. தற்போதைய டெல்லி சட்டப்பேரவை பதவி காலம் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்பாக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.