ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: சிம்ம ராசி காதல் வயப்படும் வாய்ப்புண்டு.. அப்போ உங்களுக்கு என்ன பலன்? - TODAY RASIPALAN IN TAMIL

பிப்ரவரி நான்காம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2025, 6:26 AM IST

மேஷம்: இன்று, மலரும் நினைவுகள் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும். அது உங்கள் பணியில் எதிரொலிக்கும். இதனால் மற்றவர்கள், உங்களது கனிவான தன்மை மற்றும் இளகிய மனத்தை அறிந்து கொள்வார்கள். நீங்கள் பணத்தை எச்சரிக்கையுடன் செலவழித்து, சேமிப்பீர்கள்.

ரிஷபம்: இன்று, உங்கள் செயல்களில் கோபம் வெளிப்படும். நீங்கள் சொல்வதையே அனைவரும் கேட்க வேண்டுமென்று விரும்புவீர்கள். உங்கள் உறுதியான நிலைப்பாட்டைக் கட்டுப்படுத்துவது நல்லது. புதிய பணிகள் மற்றும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இது சாதகமான நாள் அல்ல. அதனால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

மிதுனம்: நீங்கள், அனைத்து செயல்களையும் சிறந்த வகையில் செய்ய வேண்டும் என்று விரும்புபவராக இருப்பீர்கள். உங்கள் செயல்திறன் முழுவதும், ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி செய்யும் முயற்சியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

கடகம்: நீங்கள் புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடன் பொழுதை இனிமையாகக் கழிப்பீர்கள். ஆனால் உங்கள் மனதில் கவலை அல்லது பதற்றம் இருக்கும். எனினும், நீங்கள் நண்பர்களுடன், பொழுதைக் கழித்து, மாலையில் கவலையிலிருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்: உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஈகோ தடையாக இருக்க இடம் கொடுக்காதீர்கள். காதல் வயப்படுவதற்குச் சிறப்பான நாளாக இருக்கும். இருப்பினும், அதை வெளிப்படுத்துவதற்கு முன்பு, உங்கள் ஈகோவை புறம் தள்ளுங்கள்.

கன்னி: இன்று, ஒரு இனம் புரியாத பயம் உங்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கும். நேரம் ஆக ஆக, இந்த பயம் அதிகரித்து கொண்டே இருக்கும். நீங்கள் உங்கள் வெளிநாட்டு நண்பர்களுக்காக, அதிகம் செலவழிக்கும் வாய்ப்புள்ளது. அதனால், இன்று எச்சரிக்கையுடன் செயல்படுவதும் நல்லது.

துலாம்: ரியல் எஸ்டேட் மற்றும் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பண வரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குழந்தைகள் புதிய உயரத்தை எட்டுவார்கள். இது உங்கள் மனதுக்குப் பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கும். பணியிடத்தை பொறுத்தவரை உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பணப்பலன்கள் மரபுக்கு மீறியதாக இருக்கும்.

விருச்சிகம்: உங்களுக்கு இன்று எரிச்சலும், கோபமும் அதிகம் ஏற்படக்கூடும். அது வரக் கூடிய அதிர்ஷ்டத்தை பாதிக்கும். அதனால் சச்சரவுகளிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஆனால், மாலை நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, நீங்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் உணரும் வாய்ப்புள்ளது.

தனுசு: வெளிநாட்டில் உள்ள உங்களது தொடர்புகள் காரணமாக, வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்களது சிறந்த தகவல் தொடர்பு திறன் மூலம், இலக்குகளை எளிதாக அடைவீர்கள். உங்கள் துறையில், நீங்கள் சிறந்த தலைவனாக ஆக, சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவீர்கள்.

மகரம்: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக, நிறைய தியாகம் செய்துள்ளீர்கள். வேலையை விட்டு விட்டு நேரம் ஒதுக்கியது முதல், அவர்களை சந்திக்க பெரும் முயற்சி எடுத்துள்ளீர்கள். கடுமையான பணிகளையும் செய்து முடித்துள்ளீர்கள். அதற்கான அனைத்து பலன்களையும் அனுபவிக்கும் காலம் இது.

கும்பம்: சிக்கலான விஷயங்களையும், நீங்கள் மிக எளிதாக கையாள்வீர்கள். எனினும், தங்களது அனைத்து பணிகளையும் மற்றவர்கள் உங்களிடம் ஒப்படைத்து விடும் வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு, மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்கும் நிலை ஏற்படலாம். எனினும், பலவீனங்களை வலிமையாக மாற்றும் வாய்ப்புள்ளது.

மீனம்: இன்று நீங்கள் தன்னம்பிக்கை குறைவாகவோ, குழப்பமாகவோ காணப்படலாம். இது நீங்கள் எடுக்கும் முடிவுகளில் எதிரொலிக்கும். அதுமட்டுமின்றி, எளிதான தீர்வுகளை காண்பதற்குக் கூட கடினமாக்கும். எனவே, அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தவும். சர்ச்சைக்குரிய அல்லது பெரிய திட்டங்களை தவிர்க்கவும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.