பண்டா:உத்தரபிரதேசம் மாநிலம், பண்டா மாவட்டத்தில் உள்ள மரோலி கிராமத்தை சேர்ந்தவர் தீபு சிங் (33). இவரது மனைவி பிரியங்கா. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மது போதையில் இருந்த தீப சிங் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி சந்தீப் குமார், '' இச்சம்பவம் ஞாயிற்றுக் கிழமை மாலை மாடவுந்த் பகுதியின் மரோலி கிராமத்தில் நடந்துள்ளது. தீபு சிங் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க:ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை - உயர் கல்வித்துறை எச்சரிக்கை!
சம்பவத்தன்று வழக்கம்போல கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பிரியங்காவை திபு சிங் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியால் பிரியங்காவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
வெளியில் சென்றிருந்த பிரியங்காவின் மாமியார் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பிரியங்கா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடந்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள தீபு சிங்கை தேடி வருகிறோம்'' என அவர் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் குடும்ப சண்டையில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவனின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்