தமிழ்நாடு

tamil nadu

கைதிகளிடம் சாதி பாகுபாடு கூடாது 3 மாதத்துக்குள் சட்டத்தை திருத்த உச்சநீதிமன்றம் அறிவுரை - Caste Discrimination In Prisons

மாதிரி சிறை கையேடு 2016 மற்றும் மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் திருத்த சேவைகள் சட்டம் 2023 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளும்படியும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Published : 4 hours ago

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் (image credits-Getty Images)

புதுடெல்லி:மாநில சிறை மாதிரி கையேட்டில் பல்வேறு பிரிவுகளில் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 14, 15,17,21 மற்றும் 23 ஆகியவை மீறும் வகையிலான விதிமுறைகள் உள்ளதாக சுகன்யா சாந்தா என்பவர் தொடர்ந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே பி பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.

அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "ஒவ்வொருவரும் சம உரிமையோடு பிறக்கின்றோம், , எந்த ஒரு நபரையும் தொடுதல் அல்லது இருத்தல் என்பதில் வாழ்நாளில் யார் ஒருவரும் எந்த ஒரு எதிர்மறையான ஒன்றை கொண்டிருக்க முடியாது. காலனி காலத்திய மற்றும் காலனி காலத்துக்கு முந்தைய நடைமுறைகளின் படி கைதிகள் கவுரவக்குறைவாக நடத்தப்படக் கூடாது,"என்று கூறினர்.

"சாதிபாகுப்பாட்டைக் கொண்டிருக்கும் சிறை மாதிரி கையேடுகளின் விதிமுறைகளில் இருந்து மத்திய மாநில அரசுகள் விலகி இருக்க வேண்டும்," என்றும் நீதிபதிகள் கூறினர்.

"சாதிபாகுபாடு நடைமுறைகளை களைய மறுப்பது இது போன்ற நடைமுறைகள் வலுவாக நீடித்திருப்பதற்கு வழிவகுக்கும், தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இது போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளுப்படுமாயின், இந்த நடைமுறைகளை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. சாதிபாகுபாடு, தீண்டாமை கூடாது என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது," என்று நீதிபதிகள் கூறினர்.

"கண்ணியத்துடன் வாழும் உரிமை என்பது சிறையில் இருப்பவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். காலனிய காலத்தின்படியான அல்லது காலனிய காலத்துக்கு முந்தைய முறைகளின் கீழ் மனிதாபிமானமற்ற வகையில் மரியாதை குறைவான வகையில் அடக்குமுறை அமைப்புகள் முன்பு வடிவமைக்கப்பட்டிருந்தன. எனவே அந்த முறைகளின் கீழ் சிறைவாசிகளை நடத்தக்கூடாது," என்றும் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: ஈஷா விவகாரம்: தமிழக காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

"அரசியலமைப்பு சட்ட காலத்துக்கு முந்தைய சர்வாதிகார ஆட்சிகள் கைதிகள் சிறை தண்டனை அனுபவிப்பவர்களாக மட்டுமின்றி, ஆதிக்கம் செலுத்தப்படும் கருவியாகவும் பார்க்கப்பட்டனர். எனவே அரசியல் சட்டத்தில் சட்டரீதியான மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்பதில் நீதிமன்றம் கவனம் செலுத்துகிறது. கைதியாக இருந்தாலும் கூட அவர்கள் கண்ணியமுடன் வாழ உரிமை கொண்டவர்கள் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்," என்றும் நீதிபதிகள் கூறினர்.

அமர்வின் சார்பில் தீர்ப்பை எழுதிய தலைமை நீதிபதி, "சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பின்னரும் சாதிப்பாகுபாடு எனும் தீமையை அகற்ற முடியாமல் இருக்கின்றோம்," என்று குறிப்பிட்டார்.

"ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தோர் அல்லது அவர்களுக்கு எதிராக இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் பாகுபாட்டில் அமைப்பு ரீதியான நடைமுறைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். நாம் பிரதிபலிக்க வேண்டிய தேவையில் இருக்கின்றோம். அனைத்து வெளிகளிலும் விலக்கி வைக்கும் நடைமுறைகளை கவனிப்பதன் மூலம் பாகுபாபாடு முறைகளை அடையாளம் காணவேண்டிய தேவையில் இருக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலே சாதிகளின் எல்லைகள் இரும்பால் ஆனது. சில நேரம் கண்ணுக்கு தெரியாது. ஆனால், பெரும்பாலும் எப்போதும் பிரிக்கமுடியாதபடி இருக்கும். ஆனால், மிகவும் வலுவானது அல்ல. அவற்றை அரசில் சட்ட அதிகாரத்தின் படி உடைக்கமுடியாதா?," என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

"அரசியல் சட்டத்தின் பிரிவு 21 என்பது தனிப்பட்ட ஆளுமை வளர்ச்சியைப்பற்றி பேசுகிறது. சாதி ரீதியான பாரபட்சம் மற்றும் பாகுபாடு என்பது ஒருவரின் ஆளுமையின் வளர்ச்சியை தடுக்கிறது. ஆகையால் அரசியல் சட்டம் பிரிவு 21 என்பது ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தனிநபர்கள் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக சாதிய பாகுபாட்டில் இருந்து மீள்வதற்கான உரிமையை அளிக்கிறது," என்று தலைமை நீதிபதி சந்திர சூட் கூறினார்.

"முன்மாதிரி சிறைச்சாலை கையேடு 2016 மற்றும் மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம் 2023 ஆகியவற்றில் உள்ள சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை நிவர்த்தி செய்ய, மூன்று மாதங்களுக்குள் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்," என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details