ETV Bharat / state

தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய மனு: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! - TVK FLAG

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TVK கொடி, உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
TVK கொடி, உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2025, 5:01 PM IST

சென்னை: சாலையோரங்களில் உள்ள அரசியல் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சரத் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், திருவீதி அம்மன் கோயில் தெருவின் மூலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த கொடிக்கம்பங்களால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எந்த இடையூறும் இல்லை என்றும், அந்த பகுதியில் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பித்தும், இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர் என்பதால், கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.சத்திய நாராயண பிரசாத், மீண்டும் இரண்டு வாரங்களில் மாநகராட்சியிடம் புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார். அந்த விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

ஏற்கனவே, சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும் அனுமதி இல்லாமலும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை 3 மாதங்களில் அகற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அனுமதி இல்லாமல் வைக்கப்படும் கொடி கம்பங்களை அகற்ற சம்மந்தப்பட்ட கட்சிகளிடம் இருந்து அதை அகற்றுவதற்கான செலவுகளை வசூலித்துக் கொள்ளலாம் எனவும், நிலத்தின் உரிமையாளரிடம் அனுமதி வாங்கி இடையூறு இல்லாமல் வைக்கப்படும் கொடி கம்பங்களை அகற்ற தேவையில்லை என ஜனவரி 27ம் தேதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தவெக கொடிக்கம்பத்திற்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.