டெல்லி: நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி 232 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில், இன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.
உரிமை கோரிய நரேந்திர மோடி.. ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த திரெளபதி முர்மு! - narendra modi sworn - NARENDRA MODI SWORN
Modi Meets Murmu: பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.
By PTI
Published : Jun 7, 2024, 7:11 PM IST
கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடியை ராஜ்நாத் முன்மொழிந்ததை அமித்ஷா வழிமொழிந்தார். அதன்படி, நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து, தேசிய ஜனநாயக் கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார்.
அப்போது, எம்பிக்கள் பட்டியலையும் அவர் வழங்கினார். இதனையடுத்து, ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரிமை கோரினார். இதனையடுத்து, வருகிற ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.