மேஷம்: இன்று, நீங்கள் தனியாக இருந்தால் கூட, உண்மையில் தனிமையாக உணரக்கூடாது. உங்களை அதிகளவு கற்பனையாக வெளிப்படுத்துவதற்காக உங்கள் உள்ளுணர்வைக் கேட்டு, நடக்க விரும்புவீர்கள். உங்கள் மௌனத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய அன்பானவர்களோடு மாலை நேரத்தை செலவிடுங்கள்.
ரிஷபம்: உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் இயக்கப்படாமல், அதற்குப் பதிலாக நிதர்சனமான, புத்திசாலித்தனமான மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பெருந்தன்மையுடனும், திறந்த மனதுடனும் இருக்க முயற்சிக்கவும். அது உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்கும்.
மிதுனம்: வேலை மற்றும் குடும்பத்திற்கும் இடையே நேரத்தை சமமாக ஒதுக்கி, சிறப்பாக செயல்படும் நாளாக இன்று அமையும். வேலைப்பளு அதிகம் இருந்த போதிலும், குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவதுடன் சிறு பயணத்திற்கான ஏற்பாட்டினையும் செய்வீர்கள். இந்த நாள் உங்கள் கனவுகள் நிறைவேறும் நன்னாளாக அமையப் பெறும்.
கடகம்: உங்கள் முன்னேற்றத்திற்கான தனிப்பாதையை உருவாக்குவீர்கள். மக்களிடம் இருந்து மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கும். வியாபார போட்டியாளர்களாலும், நோய்களாலும் பாதிப்பு ஏற்படும். எதிரிகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள், உங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அவர்களின் திட்டங்கள் முறியடிக்கப்படும்.
சிம்மம்: நாம் உருவாக்கும் நண்பர்களே, நீண்ட கால அடிப்படையில் நாம் யார் என்பதை உருவாக்கும் காரணியாக இருக்கிறது. கடந்த காலங்களில், உங்கள் இயல்பான உள்ளுணர்வால் நீங்கள் கட்டமைத்த சமூக வட்டத்தில் அர்ப்பணிப்புள்ள நண்பர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்.
கன்னி: இன்று உங்கள் மனதில் யோசனைகள் பொங்கி வழியும். உங்கள் கடமைகளுடன், தற்போதைய வேலையை ஒப்பிட்டுக் குழம்புவீர்கள். புதிய தொடர்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது என்பதற்கு ஏற்ப, குடும்பத்தினரும், நண்பர்களும் உங்களுடன் மேலும் நெருக்கமாவார்கள்.
துலாம்: எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெற வேண்டுமானால், கடந்த கால அனுபவங்களே அதற்கு முதலீடு. உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களில் ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுத்திக் கொண்டால், உங்களுடைய நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படக்கூடிய அருவருப்பான சூழல்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். சிறிய பிரச்சினைகளைத் தவிர்த்து, இந்த நாள் இயல்பானதாக இருக்கும். உங்களுடைய புரிதலுக்கும், அணுகுமுறைக்கும் இன்று பாராட்டும், மதிப்பும் கிடைக்கும்.
விருச்சிகம்: உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டு, உடல் பருமனை தவிர்க்கவும். உங்களின் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் உடல்நலக் குறைவுகள் ஏற்படும். ஆரோக்கியமாக சாப்பிட்டு சந்தோஷமாக வாழவும்.
தனுசு: இன்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நடுநிலையாளராக மாறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். காரணங்களை கண்டுபிடிப்பதற்கு ஓரளவு கால அவகாசம் எடுத்துக் கொண்டாலும், இறுதியில் நீங்கள் விரும்பியதைச் சாதிக்கவும், அதற்கு நியாயமான தீர்வையும் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.
மகரம்: இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருந்த போதிலும், உங்களை வேலைப்பளு பாதிக்காதவாறு நடந்து கொள்வீர்கள். உங்களுக்கான இலக்கை அமைத்து செயல்படுவதன் மூலம் வெற்றியைப் பெறலாம்.
கும்பம்: நீங்கள் அதிக வேகத்துடன் இலக்குகளை அடைய முற்பட்டாலும், அது நிறைவேறாமல் போக வாய்ப்புள்ளது. நாளைய பொழுதில் மாற்றம் இருப்பதால், நம்பிக்கை இழக்க வேண்டாம். சிறிது நேரம் ஓய்வு எடுத்த புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளுங்கள்.
மீனம்: இன்று ஒரு முக்கியமான நாள் வீட்டிலேயோ அல்லது பணியிடத்திலேயோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சாதனையை நீங்கள் செய்து முடிக்கலாம். உங்கள் தொழில்முறை மற்றும் சமூக அந்தஸ்தில் ஒருபடி முன்னேறுவீர்கள்.