டெல்லி:ஆபாச காட்சிகளைக் கொண்ட பதிவுகளை ஒலிபரப்பி வந்த 19 இணையதளம், 57 சமூக வலைத்தள கணக்குகள், Google Play Store-ல் 7 செயலிகள், Apple App Store-ல் 3 செயலிகள் என மொத்தம் 10 செயலிகள் உள்ளிட்டவற்றை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில், "ஒலிபரப்பு தளங்களில் படைப்புத்திறனை வெளிப்படுத்துவதாகக் கூறி ஆபாசமான கட்சிகள் அடங்கிய பதிவுகளை ஒலிபரப்ப கூடாது. அவ்வாறு ஒலிபரப்பிய 18 ஓடிடி தளங்கள் முடக்கப்படுகின்றது.
முன்னதாக, இதுகுறித்து அரசின் துறைசார்ந்த அதிகாரிகள், பிற அமைச்சக அதிகாரிகள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, பெண்கள் உரிமைகள், குழந்தைகள் உரிமைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க:ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1லட்சம், வேலைவாய்ப்பில் 50% ஒதுக்கீடு - காங்கிரசின் அதிரடி உத்தரவாதம்!
முடக்கப்பட்ட ஓடிடி தளங்கள்: ட்ரீம்ஸ் ஃபிலிம்ஸ், நியான் எக்ஸ், மூட் எக்ஸ், வூவி, பேஷரம், மோஜ்ஃபிக்ஸ், யெஸ்மா, ஹண்டர், ஹாட் ஷாட்ஸ் விஐபி, அன்கட் அட்டா, ராப்பிட், ஃபங்கி, ட்ரை ஃப்லிக்ஸ், எக்ஸ்ட்ரா மூட், சிக்கோஃபிலிக்ஸ், எக்ஸ் பிரைம், நியுஃபிலிக்ஸ், பிரைம் பிலே ஆகியவை ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்ட தளங்களில் ஒலிபரப்பப்பட்டவை மோசமானதாகவும், ஆபாசமானதாகவும், பெண்களை இழிவாக சித்திரிக்கப்படுவதாகவும் கண்டறியறிப்பட்டுள்ளது. மேலும், முறையற்ற குடும்ப உறவுகள், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான தவறான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆபாச காட்சிகள் சித்திரிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டு இருந்தது.
மேலும், இந்த முடக்கப்பட்ட ஓடிடி தள செயலிகளில் சில செயலிகள் 50 லட்சம் முதல் 1 கோடி பதிவிறக்கங்களைப் பெற்றிருந்தவை. இந்த ஓடிடி தளங்கள், மக்களைக் கவரும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆபாசமான மற்றும் பாலியல் எண்ணத்தைத் தூண்டும் பதிவுகளைப் பகிர்ந்து வந்த சமூக வலைத்தளப் பக்கங்களை 32 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பின் தொடர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:"ஜாபர் சாதிக் விடுதலைக்கு காரணம் எடப்பாடி நியமித்த அரசு வழக்கறிஞர்” - ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!