மகாராஷ்டிரா:மகாராஷ்டிரா மாநிலம், மாலேகானில் உள்ள திருமண மண்டபத்தில் வேலை புரியும் காவலாளியின் மகன் மோகித் விஜய். இன்று (மார்ச் 6) தனது தந்தை வேலை செய்யும் மண்டபத்திற்கு வந்த விஜய், ஒரு அறையில் அமர்ந்து மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, அந்த அறைக்குள் சிறுத்தை புகுந்துள்ளது.
சிறுத்தையைக் கண்டு சுதாரித்துக் கொண்ட சிறுவன், எந்த ஒரு பதற்றமும் இன்றி, நிதானமாக அமர்ந்திருந்த இடத்தை விட்டு நகர்ந்து, சிறுத்தையை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு ஓடியுள்ளார். பின்னர், சிறுவன் தனது தந்தையிடம் சிறுத்தை குறித்து தெரிவித்த நிலையில், உடனடியாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.