உலக உயிர்களை காக்க சிறப்பு யாகம் - Special yagam to save the lives of the world in thanjavur
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஆலடிக்குமுளை கிராமத்தில் உள்ள நல்வழிக்கொல்லை சித்தர் ஆசிரமத்தில் உள்ள பிரித்திங்காதேவி அம்மனுக்கு நேற்று (ஜூலை 9) இரவு அமாவாசை தினத்தை முன்னிட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து இரவு 9 மணிக்கு மேல் உலக உயிர்களை பல்வேறு வகையான வைரஸ் தாக்குதலிலிருந்து காக்கவும்; உலக அமைதி வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தை நல்வழிசித்தர் முன்னின்று நடத்தினார். இதில் கரோனா காரணமாக தகுந்த இடைவெளியுடன் சிலபக்தர்களே கலந்து கொண்டனர்.