குடியிருப்பு பகுதியில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு...! - ஸ்ரீவில்லிபுத்தூர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் வசித்துவரும் முருகன் என்பவர் தனது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டுவதற்காக கட்டுமான பொருட்களை அடுக்கி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பொருட்களின் உள்ளே 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறையினக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை வனப்பகுதிக்குள் விட்டனர்.