ஐந்தாண்டு காதல்: நெதர்லாந்து நாட்டு இளைஞரை கரம் பிடித்த கோவை பெண்! - COVAI GIRL MARRY NETHERLAND BOY
🎬 Watch Now: Feature Video


Published : Jan 20, 2025, 11:10 PM IST
கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்த பெண் 5 ஆண்டுகளாக காதலித்த நெதர்லாந்து நாட்டு இளைஞரை தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சாமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமலதா. ஐடி ஊழியரான இவர் நெதர்லாந்து நாட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, நெதர்லாந்து நாட்டில் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்த ரமோன் ஸ்டீன்ஹீஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்ட பின்னர் அது காதலாக மாறியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, இரு வீட்டார் சம்மதத்துடன் கோவை பெரியநாயக்கன்பாளையம் இடிகரை அருகே தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டார் உறவினர்கள் முன்னிலையில் நேற்று (ஜனவரி 19) ஞாயிற்றுக்கிழமை, தமிழ் பாரம்பரிய முறைப்படி அக்னி சாட்சியாக அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதில், நெதர்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்த ரமோன் ஸ்டீன்ஹீஸ் பெற்றோர்கள் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் தமிழரின் பாரம்பரிய வேட்டி மற்றும் சேலைகளை அணிந்தவாறு திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.