அரசியலில் பிரவேசிக்கும் ரஜினி : ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்! - ரஜினியின் அரசியல் கட்சி
🎬 Watch Now: Feature Video
திருப்பூர் : ஜனவரி மாதம் கட்சி தொடங்கி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக நடிகர்1 ரஜினிகாந்த் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பூர் மாநகர ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தினர், திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும் அப்பகுதி வழியாக வந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.