ETV Bharat / state

பாளையங்கோட்டை மத்திய சிறை.. திடீர் ஆய்வு செய்ய ஐகோர்ட் மதுரை அமர்வு உத்தரவு! - PALAYAMKOTTAI CENTRAL JAIL

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறை கைதிகளுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 16 hours ago

மதுரை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறை கைதிகளுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படுகிறதா? உரிய மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்படுகிறதா? என்பது குறித்து திருநெல்வேலி சட்டப்பணிகள் ஆணைய குழு தலைவர், சிறை துறைக்கு முன்கூட்டி தகவல் குடுக்காமல் சென்று திடீர் ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த முகமது தாரிக் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எனது சகோதரர் ஆசிக், வழக்கு ஒன்றில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக நாங்கள் பாளையங்கோட்டை சிறை சென்று பார்த்தோம். அப்பொழுது எனது சகோதரர் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தார்

பாளையங்கோட்டை சிறையில் முறையான உணவுகள் வழங்குவதில்லை. மருத்துவர் அவசரத்திற்கு சிகிச்சை செய்ய மருத்துவர் கிடையாது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே கைதிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மருத்துவ அறைகள் தற்போது கைதிகள் தங்க வைக்கும் அறையாக மாறிவிட்டது. மேலும், அரசு அறிவித்துள்ளபடி, சிறையில் உணவு, பால், முட்டைகள் வழங்குவதில்லை.

அரிசிகள் மிகவும் குறைத்தும், காய்கறிகள் வேகாமலும், கைதிகளுக்கு தரம் இல்லாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் சிறை கைதிகளுக்கு உரிய சத்தான உணவுகளை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

இந்த வழக்கு இன்று(டிசம்பர் 27) வெள்ளிக்கிழமை நீதிபதிகள் வேல்முருகன், ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறை துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “சிறைகளில் தற்போது தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. மனுதாரர் தினந்தோறும் பாலும், முட்டையும் கேட்டு பிரச்சனை செய்கிறார். மற்றபடி அரசு விதிகளின்படி சிறை கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

அப்பொழுது நீதிபதிகள், “சிறையில் உணவு ஒழுங்காக வழங்கப்படவில்லை என்பதால் தான் நீதிமன்றத்திற்கு வருகின்றனர். அரசு மக்களுக்கு பல்வேறு உத்தரவுகளை அரசாணைகளாக வெளியிட்டு வருகிறது. ஆனால், அதனை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. அரசின் உத்தரவுகளை முறையாக நிறைவேற்றினாலே போதும். ஆனால், எல்லாம் பேப்பரில் மட்டும் உள்ளது. சிறையில் அவ்வப்போது மாவட்ட சட்ட உதவி குழுக்கள், மாவட்ட நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படுகிறதா? என்பது தெரியவில்லை.

எனவே, நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு தலைவர், பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் முறையாக மருத்துவம் உணவுகள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து மத்திய சிறையில் 3 நாட்கள் (ஒரு நாள் காலை உணவு, மற்றொரு நாள் மதிய உணவு, மற்றொரு நாள் இரவு உணவு) சிறை துறைக்கு முன்கூட்டி தகவல் குடுக்காமல், சென்று திடீர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.