ETV Bharat / state

'நம்மைக்காக்கும் 48' திட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு விருது...மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் பெருமிதம்! - GOVERNMENT RAJAJI HOSPITAL

இன்னுயிர் காப்போம் 'நம்மைக்காக்கும் 48' திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மாநிலத்திலேயே முதல் பரிசை வென்றுள்ளது என மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 16 hours ago

மதுரை: இன்னுயிர் காப்போம் 'நம்மைக்காக்கும் 48' திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மாநிலத்திலேயே முதல் பரிசை வென்றுள்ளது என மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் தெரிவித்துள்ளார்.

"இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மைக் காக்கும் 48(IKT -NK 48) திட்டம்" தமிழக முதல்வரால் கடந்த டிசம்பர் 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி எந்தவொரு நபரும் சாலை விபத்தில் காயம் அடைந்தால் NK 48 திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ரூபாய் ஒரு லட்சம் வரை எவ்வித கட்டணமுமின்றி உயிர்காக்கும் அனைத்து சிகிச்சைகளும் பெற இயலும், தற்போது இத்திட்டத்தின் வரவேற்பு காரணமாக சிகிச்சைக்கான செலவு வரம்பை இப்போது இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது

உயர்தரமான மருந்துகள்: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார், "2021ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்தே மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தமிழகத்திலேயே முதலிடம் பெற்று சிறப்புடன் இயங்கி வருகிறது. இந்த சாதனைக்காக அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு துணைத் தலைவர் பேராசிரியர் சரவணக்குமாருடன் நானும் விழாவிற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டோம்.

இன்னுயிர் காப்போம் 'நம்மைக்காக்கும் 48' திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல் பரிசு பெறும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார்
இன்னுயிர் காப்போம் 'நம்மைக்காக்கும் 48' திட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல் பரிசு பெறும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் (Image credits-ETV Bharat Tamil Nadu)

இந்த திட்டத்தின் கீழ் தலைசிறந்த மருத்துவர்கள் மூலம் 24 மணி நேரமும் சிறந்த முறையில் பணியாற்றி, ஏழை எளிய மக்களின் விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்றி வருகின்றோம். மேலும் இத்திட்டத்தினை விரைவாக செயல்படுத்தும் நோக்கில் தனி குழு பணியமர்த்தப்பட்டு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை துறையானது 'தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன் முயற்சி(TAEI)' எனப்படும் திட்டத்தோடு ஒருங்கிணைந்து Zero Delay எனப்படும் உடனடி அவசர சிகிச்சை வழங்குகிறது. நோயாளிகளை நோயின் தீவிர தன்மைக்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: பாளையங்கோட்டை மத்திய சிறை.. திடீர் ஆய்வு செய்ய ஐகோர்ட் மதுரை அமர்வு உத்தரவு!

எல்லாவிதமான உயர்தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனுக்குடன் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால் பல ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகளின் உயிரும் உடலும் காப்பாற்றப்பட்டு நலமுடன் உள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு உலக வங்கி பிரதிநிதிகள் அடங்கிய குழு நமது அவசர சிகிச்சைத்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மிகவும் பாராட்டியதோடு தமிழ்நாட்டிலேயே முன் மாதிரியான அவசர சிகிச்சைத்துறை என சான்றளித்தது. தமிழகத்தின் பிற மருத்துவ கல்லூரிகளின் அவசர சிகிச்சைத்துறை மருத்துவர்கள் இங்கு பயிற்சி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அதன் பேரில் பயிற்சி அளிக்கப்பட்டது,"என்றார்.

12000 நோயாளிகளுக்கு சிகிச்சை: மேலும் இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு தலைவர் பேராசிரியர் டாக்டர் கே பி சரவணக்குமார் கூறுகையில், "இன்னுயிர் காப்போம்... நம்மை காக்கும் 48 திட்டத்தின் நோக்கம் என்பது, எதிர்பாரா விபத்தில் சிக்குகின்ற நபர்களை மீட்டு, உடனடி அவசர சிகிச்சையின் மூலமாக அவர்களது உயிரைக் காப்பதுதான். அவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவோ அல்லது வெளிமாநிலம் அல்லது வெளி நாட்டவராகவோ இருக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் அவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அல்லது அரசு மருத்துவமனையிலோ சிகிச்சை அளிப்பது தான் இதன் முக்கிய நோக்கம்.

இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை 12 ஆயிரத்து 34 நோயாளிகள் உயிர் காப்பாற்றப்பட்டு நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இதன் மதிப்பு 15 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 360 ரூபாய் ஆகும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செய்துள்ள இந்த சாதனையை கௌரவப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் விருது வழங்கி சிறப்பித்துள்ளார். இந்த வரிசையில் இரண்டாவது மாவட்டமாக விழுப்புரமும் மூன்றாவது மாவட்டமாக திருவண்ணாமலையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருதால், அடித்தட்டு ஏழை மக்களுக்கு சிறந்த தரமான தாமதமற்ற சிகிச்சை வழங்க எங்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது,"என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.